மன்னிப்பு.. "கேப்டன்" நம்மளை நல்லா ஏமாத்திட்டாருப்பா.. டிஎன்பிஎஸ்சி பரிதாபங்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை- வீடியோ

  சென்னை: மன்னிப்பு எம்மொழி சொல் என்ற கடினமான கேள்வியை கேட்டு அதற்கு ஆப்ஷன்களையும் கொடுத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎன்சி) தேர்வு எழுதியவர்களை குழம்பும் அளவுக்கு திணறடித்துவிட்டது.

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4, குரூப் 1, குரூப் 2 , விஏஓ, இந்து அறநிலையத் துறை பணி ஆகியவற்றுக்கான தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்கிறது. அந்த வகையில் குரூப் 4 பதவியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது.

  Netisans make fun of using TNPSC question

  இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுத 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 6,962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் கேட்கப்பட்ட கேள்வியை கலாய்த்து சமூகவலைதளங்களில் கருத்துகள் பறிமாறப்பட்டு வருகிறது.

  மன்னிப்பு என்ற சொல் எம்மொழி சொல் என்று கேள்வி கேட்கப்பட்டு அதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டன. அதில் தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம் என்று உள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

  தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு என்று விஜயகாந்த் ஒரு படத்தில் கூறும் வசனத்தை வைத்து நாட்டாமை கிளைமேக்ஸ் காட்சியுடன் பொருத்தி அதில் மனோரமா கேப்டன் நம்மள ஏமாத்திட்டாருப்பா, மன்னிப்பு தமிழ் வார்த்தை இல்ல, அது உருது என்றும் அதை கேட்ட நாட்டாமை (தமிழ் என்று விடை தேர்வு செய்த தேர்வர்) அதிர்ச்சியுடன் என்னாது தமிழ் இல்லையா.

  Netisans make fun of using TNPSC question

  இன்னொரு மீமில், மன்னிப்பு இந்த வார்த்தை ஏதே ஒரு டயலாக்கில் வருமே என்று நடிகர் சிவா கூறுவது போல் கூறி புடிச்சுட்டேன் கேப்டன் சொன்னா கரெக்டாதான் இருக்கும். ஆப்ஷன் A-வ லாக் செய்யுங்க என்று கிண்டலடித்து நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

  ஆனால் மன்னிப்பு என்பது உருது வார்த்தை என்று தமிழ் பேராசிரியர்கள் கூறுகின்றனர். இது விஜயகாந்துக்கு தெரியாம போயிருச்சேய்யா

  "மன்னிப்பு" கேள்வியை போல் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றொரு கேள்வியும் கேட்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர் எந்த ஆண்டு பிறந்தார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட 4 விடைகளும் தவறானதாகும். மேலும் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் சம்பவத்தை வடிவேல், பிரென்ட்ஸ் பட காமெடி உள்ளிட்டவை கொண்டு நெட்டிசன்கள் வீடியோவாக ட்ரோல் செய்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A question asked in TNPSC Group 4 that Mannippu is which language's word.Netisans make fun of this question. This question goes viral.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற