Memes: டேய் என்னடா கட்டை விரலுக்கெல்லாம் மோதிரம் போட்ருக்க? நான் இப்ப தக்காளி வியாபாரி ஆயிட்டேண்ணே!
சென்னை: தக்காளி விலை தினந்தோறும் கிடுகிடுவென ஏறிக் கொண்டே செல்கிறது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தக்காளி 3 கிலோ ரூ 50 க்கு விற்ற நிலை மாறி 1 கிலோ 50க்கு விற்பனையானது. அதன் பிறகு ரூ 60 க்கு விற்பனையானது . தற்போது ரூ 100க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிலேயே இந்த விலை என்றால் சில்லறை விலை கடைகளில் ரூ 20 முதல் 30 வரை அதிகம் விலை வைத்தே விற்கப்படும்.
இந்த தக்காளி விலை இப்படி ஏறிக் கொண்டால் போனால் இனி தக்காளி என பேப்பரில் எழுதி வைத்துதான் அதை காட்டிதான் சமைக்கணும் போல! சரி வாங்க நம்ம மீம்ஸ்களை பார்ப்போம். கொஞ்சம் ஆசுவாசுமாகிப்போம்!

பணத்திமிர்
இப்போ நான் இதை சொன்நால் பணத்திமிரில் சொல்றேன்னு நினைப்பீங்க...
இன்னைக்கு எங்க வீட்டில தக்காளி சட்னி என இந்த வலைஞர் மீமாக தெரிவித்துள்ளார்.

எதுக்கு அரெஸ்ட்
சார் ஏன் சார் என்ன அரெஸ்ட் பண்ணி வச்சுருக்கீங்க
நீ தக்காளி சாப்பிட்டு இருந்தே அதான். எங்கே இருந்துடா வந்தது உனக்கு அவ்வளவு பணம் என்கிறது இந்த மீம்.

தக்காளி கிலோ 140 ரூபா
தக்காளி 1கிலோ 140 ரூபாய்
பெட்ரோல் டீசல் விலை - டேய் நாங்க மாசத்துக்கே 1 ரூபா 2 ரூபா தான் ஏற்றுவோம் நீ என்னடா பொசுக்குன்னு ரூ 100 ஏறிட்ட! என்கிறது இந்த மீம்.

கட்ட விரலுக்கு மோதிரமா
டேய் என்னடா கட்ட வெரலுக்கு எல்லாம் மோதிரம் போட்ருக்க?
நான் இப்ப தக்காளி வியாபாரி ஆயிட்டேண்ணே! என கவுண்டமணி செந்தில் காமெடியை சொல்கிறது இந்த மீம்.