ஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிப்பா... குமாரசாமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்த்து சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா

  பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவி கைக்கு வந்த நிலையில் அதை பாஜக பறித்துவிட்ட கோபத்தில் உள்ளார் மஜதவின் குமாரசாமி.

  ஆனால், தமிழ் நெட்டிசன்களோ, வெறும் 38 சீட்டுகளை வைத்துக்கொண்டு முதல்வராக முயன்ற குமாரசாமியை ஆச்சரியமாகவும், கேலியாகவும் பார்க்கிறார்கள். காவிரி பெல்ட்டில் குமாரசாமி கட்சி வலிமையாக இருக்கும் நிலையில் அவர் முதல்வராக கூடாது என்று தமிழ் நெட்டிசன்கள் நினைப்பதும் இதற்கு ஒரு காரணமாக தெரிகிறது.

  இதையடுத்து, குமாரசாமிக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்றதும் கேலி மீம்களுடன் களமிறங்கிவிட்டனர். இப்படி குமாரசாமியை கலாய்த்து சுற்றிக்கொண்டிருக்கும், பிரபல மீம்கள் சிலவற்றை இங்கே பாருங்க. இருந்தாலும்,

  நீங்களும் நினைச்சிட்டீங்கல்ல

  குமாரசாமி நவ்: நீங்களும் நான்தான சிஎம்னு நினைச்சிங்க,அப்ப நான் நினைச்சதில தப்பில்லையே 😂😂😂

  பெருமையா இருக்கு

  குமாரசாமி : அடேய் உப்பீஸ் , என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு எனக்கு முட்டு குடுத்தீங்களேடா, உங்கள நெனச்சா எனக்கு ரொம்பப்பெருமையா இருக்குடா

  ஆஹா இவரா

  குமாரசாமி:- ஹலோ.. யாரு ஆளுநராங்க...?? இல்ல .... அமித்ஷா ஆத்தீ

  தைரியசாலிப்பா

  ஆனாலும் குமாரசாமி நீ ரொம்ப தைரியசாலிப்பா. எப்படித்தான் 37 சீட்டவச்சுக்கிட்டு கவர்னர் முன்னாடி நிக்கிறீயோ? என்கிறது இந்த மீம். ஆனால் 38 எம்எல்ஏக்கள் என்பதே சரி.

  எம்எல்ஏக்களை காணோம்ங்க

  இங்க பாருடி கர்நாடகா முதல்வரு குமாரசாமி! நானே MLA களை காணோம்னு தேடிட்டு இருக்கேன் இவழுக வேற!!😊😊😊 இப்படி சொல்கிறது இந்த டுவிட்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizen troll Kumaraswamy over missing CM chance in Karnataka.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற