எம்பிஏ கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா? #பக்கோடா டிவிட்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பக்கோடா விற்பனை குறித்து பாஜக தலைவர்கள் கூறி வரும் கருத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி பக்கோடா விற்பவர்கள் கூட நாள்தோறும் 200 ரூபாய் சம்பாதிப்பதாக கூறினார். அதனை வேலை வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதையே பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கூறினார். பக்கோடா விற்பது ஒன்றும் தவறான தொழில் இல்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பக்கோடா விற்பது ஒன்றும் தவறல்ல என கூறியுள்ளார். இதனை கலாய்த்து சமூக வலைதளங்களில் ஏராளமான டிவிட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

பக்கோடா கிடைக்கும்..

B-பக்கோடா
J- ஜனதா
P-பார்ட்டி .
இங்கு கார இனிப்பு பக்கோடா கிடைக்கும்.. என்கிறார் இந்த நெட்டிசன்

கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா

என்ன... மாஸ்டர் பக்கோடா செம டேஸ்ட்டா இருக்கு!!
"MBA கோல்டு மெடலிஸ்ட்னா சும்மாவா? என கேட்கிறார் இந்த வலைஞர்

பக்கோடா விலை திடீர் சரிவு

வேலையில பட்டதாரிகள் அனைவரும் பக்கோடா விற்க களமிறங்கியதால்...
பங்கு சந்தையில் பக்கோடா விலை திடீர் சரிவு.. என கலாய்க்கிறது இந்த டிவிட்

பக்கோடா செய்து...

தேசத்தை கொள்ளையடிக்க சிலர் நினைத்தார்கள். நாங்கள் சேவை செய்து வளர்க்க நினைக்கிறோம் - மோடி
சேவை செய்து அல்ல பக்கோடா செய்து... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

வாங்கறது யாருங்க

எல்லாரும் பக்கோடா விற்க போயிட்டா வாங்கறது யாருங்க அக்கா! என கேட்கிறார் இந்த வலைஞர்

இதுதான் உங்க மாற்றமா??

எது மாற்றம்??
படித்த இளைஞரை பக்கோடா விற்க சொல்லுவது...
இதுதான் உங்க மாற்றமா?? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

பதஞ்சலி பக்கோடா...

ரிலையன்ஸ் பக்கோடா...
பதஞ்சலி பக்கோடா...
விரைவில்... என கிண்டலடிக்கிறகார் இந்த நெட்டிசன்

பக்கோடா லோனா?

பக்கோடா லோனா? புதுசா இருக்கு.. பக்கோடாவுக்கு லோன் வழங்கப்படும் என போர்டு வைக்கப்பட்டுள்ளது.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of PM Modi and Amit shah and Tamilisai Statement on Pakkoda business.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற