நெடுவாசல் போராட்டம்: தோற்று போய் நிற்கிறது ஜனநாயகமும் அரசாங்கமும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் திரண்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசல் போராட்டத்துக்கு சமூக வலைதளங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது.

நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புதுக்கோட்டையில் குவிந்துள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொது மக்களின் போராட்டத்தால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெடுவாசல் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தடி கொண்ட அய்யனார் திடலில்..

புதுக்கோட்டை தடி கொண்ட அய்யனார் திடலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக திரண்ட மக்கள்!!

விவசாயிகளுக்காக..

நாங்க போராட்டம் நடத்துறது இந்த விவசாயிகளுக்காக.. வருங்கால சந்ததிகளுக்காக.. என்கிறது இந்த மீம்..

தோற்று போய் நிற்கிறது

சொந்த நாட்டு மக்களையே, தங்கள் உரிமைக்காக போரட வைத்ததில், தோற்று போய் நிற்கின்றது ஜனநாயகமும் அரசாங்கமும்... என்கிறார் இந்த நெட்டிசன்..

துன்புறுத்துவதை நிறுத்து.

விவசாயிகளின் ரத்தத்தை உடம்பில் தடவிக்கொள்.. பிறகாவது விவசாயிகளை துன்புறுத்துவதை நிறுத்து.. என்கிறது இந்த மீம்

ஏகப்பட்ட பிரச்சனை

#மீத்தேன் #நெடுவாசல்ன்னு ஏகப்பட்ட பிரச்சனை போய்ட்டு இருக்கு அதை எல்லாம் விட்டுட்டு சிம்பு பாட்டு பாடுனான் கமல் ஷோ நடத்துறாருன்னு வருதுங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Neduvasal villagers protest in Pudukottai. Netizens supports Neduvasal protest through social media.
Please Wait while comments are loading...