ஆர்சிபி தத்தளிக்கும் போது.. டக் அவுட்டில் 'தனி கேம் ஆடிய' ஜேமிசன்.. யார் அந்த பெண்? வைரலாகும் மீம்ஸ்
அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடர்பாக மீம்ஸ் கொடி கட்டி பறக்கின்றன.
Recommended Video
அதிலும் குறிப்பாக, ஆர்சிபி பவுலர் கைல் ஜேமிசன், தனது அணியின் மசாஜ் தெரபிஸ்ட்டை பார்த்து விட்ட லுக் ஹாட் ஆப் தி டவுன் என்பதை போல வைரலாக சுற்றி வருகிறது.
நேற்று ஆர்சிபி 92 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், 10 ஓவர்களில் கொல்கத்தா அந்த இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக சேஸ் செய்து அசத்தியது. ஆர்சிபி நேற்று ப்ளூ ஜெர்சியில் ஆடியது. ஏற்கனவே ரெகுலரான சிவப்பு ஜெர்சி போக, பச்சை நிறத்திலும் ஆர்சிபிக்கு ஒரு ஜெர்சி உண்டு. ஆனால் எத்தனை ஜெர்சியில் வந்தாலும், வெற்றி பெறமாட்டேங்கிறார்களே என்றும் மீம்ஸ் சுற்றி வருகிறது.

ஜெர்சி கலர் மாற்றம்
எந்தெந்த வருடங்களில் ஆர்சிபி ஜெர்சி கலரை மாற்றி ஆடுகிறதோ அப்போதெல்லாம் அந்த அணி மோசமாக தோற்றுப் போயுள்ளதாக, சுட்டிக் காட்டுகிறது இந்த மீம்.

இங்கே தனி கேம்
ஆர்சிபி ஸ்கோர் 53/4 என்று மோசமாக இருந்தபோது, 10 வது ஓவரின் போது ஆர்சிபி டக்அவுட்டை நோக்கி கேமரா மேன் கேமராவை திருப்பினார். அங்கே பார்த்தால், ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காலில் கால் காப்பு கட்டியபடி அமர்ந்து இருந்தார். ஆனால் அவர் மைதானத்தை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அணியின் மசாஜ் தெரபிஸ்ட் நவனிதா கவுதம் என்ற பெண் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரை பார்த்து கைல் ஜேமிசன் சிரித்துக் கொண்டிருந்தார். நவனிதாவும் சிரித்துக் கொண்டிருந்தார். டிவியில் இந்த காட்சி தோன்றியவுடன் அது சோஷியல் மீடியாவில் வைரலானது. ஜேமிசன் மட்டும் வேறு கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்.. என்று ரசிகர்கள் கிண்டல் செய்து மீம் போடத் தொடங்கினர். தனது டீமிலுள்ள ஒரு பெண்ணும், ஆணும் சிரித்துக் கொள்வது அவ்வளவு தப்பா நியாயமாரே?

தோனியை விட அதிக ரன்
ஆர்சிபி தோற்றால் என்ன, ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் கடந்த 8 போட்டிகளில் 47 ரன்கள் அடித்துள்ளார். ஆனால், தோனி 40 ரன்கள்தானே எடுத்துள்ளார். ஆர்சிபிஐ நாம கிண்டல் செய்யலாமா எனக் கேட்கிறது இந்த மீம்.

3 செட் ஜெர்சி
ஆர்சிபி ஜெர்சி மட்டும் 3 செட் வச்சிருக்கு. ஆனால் இதுவரை ஒரு ஐபிஎல் கப் கூட அடித்ததில்லை என்பதை சுட்டிக் காட்டி சீண்டுகிறது இந்த மீம்.

விராட் கோலி அழகன்
அட, வெற்றி தோல்வியை விடுங்க. எந்த ஜெர்சி போட்டாலும், விராட் கோலி அழகாகத்தான் இருக்கிறார், என்று போட்டோ "ஆதாரத்தோடு" தெரிவிக்கிறது இந்த ட்வீட்.

நன்கொடை
ஆர்சிபி விளாசும் ஒவ்வொரு பவுண்டரி, சிக்சர் மற்றும் அந்த அணி பவுலர்கள் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் டைட்டில் ஸ்பான்சர் டொனேட் செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், இந்த ஸ்கோருக்கு இவ்வளவுதான் நன்கொடை கிடைக்கும் என்று சொல்கிறது இந்த மீம்.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications