'சூப்பர்மேன்' ஷர்துல்.. 'வடசென்னை தனுஷ்' சஞ்சு சாம்சன்.. போராடிய இந்திய அணி.. டாப் மீம்ஸ் இதோ!
சென்னை: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை வைத்து ரசிகர்களால் பல மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் அதிரடியால் 40 ஓவர்களுக்கு 249 ரன்கள் விளாசியது.
இதனைத்தொடர்ந்து 250 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்ததோடு, அதிக டாட் பால்களையும் விளையாடியது. இறுதி நேரத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன்63 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி போராட்டம்
இதனைத்தொடர்ந்து சஞ்சு சாம்சனின் போராட்டத்தை பாராட்டும் வகையில் ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். குறிப்பாக வடசென்னை படத்தில் தனுஷ் பேசும் வெற்றியோ தோல்வியோ, சண்டை செய்யனும் என்ற வசனத்தை வைத்து வெளியிடப்பட்டு வரும் மீம்ஸ் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ரவி பிஷ்னாய் பவுலிங்
இதேபோல் இந்திய அணியின் இளம் வீரர் ரவி பிஷ்னாய் 8 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக்கொடுத்தார். கடைசி நேரத்தில் மில்லர் மற்றும் கிளாசன் ஆகியோருக்கு எப்படி வீச வேண்டும் என்று தெரியாமல் திணறினார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயித்த இலக்கு அதிகமாக மாறியது. இதனை சந்தான காமெடியில் வரும் வசனத்துடன் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஷர்துல் தாகூர் அதிரடி
அதேபோல் நேற்றையப் போட்டியில் 8 ஓவர்கள் வீசிய ஷர்துல் தாகூர் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுக்கோப்பாக வீசினார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சஞ்சு சாம்சனுக்கு நிகராக அதிரடியாக ரன்களை குவித்தார். இவர் 31 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் உட்பட 33 ரன்களை எடுத்தார். ஆல் ரவுண்டராக கலக்கிய ஷர்துல் தாகூரின் ஆட்டத்தை வைத்து சூப்பர் மேனுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் மீது விமர்சனம்
அதேபோல் கடைசி நேரத்தில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் ஆவேஷ் கானிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்ததை வைத்து விமர்சனத்துடன் கூடிய மீம்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவரது பேட்டிங்கை புதுப்பேட்டை படத்தில் வரும் அழகம்பெருமாள் பேசும் வசனத்துடன் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications