பரிசுப் பொருளைக் கொடுத்தால் பிறந்த தினம் பர்சையே கொடுத்தா காதலர் தினம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள காதலர் தினத்திற்கு காதலர்கள் ஒரு பக்கம் தயாராகி வர, காதலர்களுக்கு எதிரான கலாச்சார பாதுகாவலர்களும் ரவுண்டு கட்ட தயாராகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் காதலர் தினத்தை ஒட்டி வலம் வரும் சில கமெண்ட்டுகளை இங்கே பார்க்கலாம்.

காதலர் தின கொண்டாட்டத்திற்காக உலகம் முழுவதும் காதலர்கள் உற்சாகமாகத் தயாராகி வருகின்றனர். டேட்டிங், சர்ப்ரைஸ் கிப்ட் என்று செம பிளானில் இருக்கிறார்கள்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது என்று எதிர்ப்புக் குரல்களும் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. காதலர் தினம் குறித்து டுவிட்டரில் குவிந்துள்ள கருத்துகளில் சில சுவாரஸ்யமான தொகுப்புகள் உங்களுக்காக. சிரிக்க மட்டுமே.

தெரியாத வயசுடா அது?

என்னது நாளைக்கு ஸ்கூல் கட் அடிச்சுட்டு ஆளோட சினிமாவுக்கு போறீங்கலோ.. அடேய்.. உன் வயசுல எனக்கு அந்த தேதி காதலர்தினம்னா என்னன்னு கூட தெரியாது என்று இன்றைய தலைமுறையை பார்த்து கேட்கும் நிலைமையில் காதலர் தின கொண்டாட்டம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறுகிறார் இவர்.

ஒவ்வொரு வருஷம் ஒவ்வொருத்தரோடவா?

காதலர்தினம் கொண்டாடுறது கூட தப்பில்லடா. ஆனா ,ஒவ்வொரு வருசமும் ஒருத்தரோட கொண்டாடுறிங்க பாத்திங்கலா
அதுதான்டா மன்னிக்க முடியாத தப்பு என்று சமூகத்திற்கு பஞ்ச்டயலாக் சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன்.

பர்சையே கொடுத்தால் அதான் காதலர் தினம்

பரிசு பொருளை கொடுத்தால் அது பிறந்த தினம். பர்சையே கொடுத்தால் அது தான் காதலர் தினம் என்று லாஜிக்காக கருத்து டுவீட்டியுள்ளார் இவர்.

12 கார்டு குடுங்க

"உன்னை மட்டுமே காதலிக்கிறேன்'னு எழுதிய கிரீட்டிங் கார்டு இருக்கா சார் ?! "இருக்குங்க".... அப்ப ஒரு 12 கார்டு குடுங்கங்குற நிலைமையில தான் இன்றைய காதலர்தின கொண்டாட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார் இவர்.

காதலர் தினம் கேட்குதோ?

நாளைக்கு என்ன நாள்.. காதலர் தினம் அப்பா.. நாயே கரண்ட் பில் கட்ட காசு இல்லாம இருக்கேன்.. உனக்கு காதலர் தினம் கேட்குதா என்று மிடில் கிளாஸ் பசங்களின் நிலைமையை பதிவு செய்துள்ளார் இவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens trolling Valentines day with meaningful thoughts, here is some of the interesting meems which scans youth's mindset.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற