For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லா வாசிங்க பாஸ்.. மனசுக்கு ரொம்ப ரொம்ப நல்லது!

Google Oneindia Tamil News

புத்தகம் படிக்கும் பழக்கம் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது. நான் படிப்பதே இல்லை என்று சொல்வோர் கையைத் தூக்குங்க பார்ப்போம்.. முதல்ல உங்களுடைய இந்த கெட்ட பழக்கத்தை மாத்திக்குங்க அன்பர்களே.. காரணம், புத்தகம் படிப்பது என்பது நமது மனதை செம்மையாக்க ரொம்ப உதவும்.

எப்படின்னு கேட்கறீங்களா... புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நம் அறிவு மட்டுமல்ல மனதும் விசாலமடைகிறது. புத்தகங்கள் தான் நமக்குச் சிறந்த நண்பர்கள். நம்ம வழிநடத்தும் சிறந்த வழிகாட்டிகள் புத்தகங்கள். கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு நிகரானவை புத்தகங்கள்.

Book reading is the best habit to relax your mind

என் கல்லறையின் மீது புத்தகங்களை அடுக்கி வையுங்கள் என்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கூறினார். எண்ணற்ற தலைவர்கள் புத்தகங்கள் வாசித்து பெரிய நிலையை அடைந்துள்ளனர். புத்தகங்களின் வாஞனையை நுகரும் போதே நம் மனதில் மகிழ்ச்சி துள்ளும். இனம்புரியாத ஓர் திருப்தி இருக்கும் அதில். தனிமையை கூட இனிமையாக மாற்றும் சக்தி புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு.

பல தலைவர்கள் புத்தகம் வாசித்ததால் தான் உயரிய இடங்களுக்கு வந்திருக்கின்றனர். டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள் குடியரசுத் தலைவராக டெல்லியில் வசித்த போது ஒரு கன்டெய்ன்மென்ட் லாரி முழுவதும் என்ன இருந்தது தெரியுமா. எல்லாமே புத்தகங்கள். கலாம் அவர்கள் அறிவியல் விஞ்ஞானி மட்டுமல்ல எழுத்தாளரும் கூட.

தனியாவே பண்றதுதான் வெண்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!தனியாவே பண்றதுதான் வெண்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!

அடிமைகளின் சூரியன் என்றழைக்கப்படும் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஜார்ஜ் வாஷிங்டனின் வரலாற்றைப் படித்தார். அப்போது தான் அவருக்கு குடியரசுப் பதவி மீது ஆசை ஏற்பட்டது. இறுதியில் குடியரசுத் தலைவரானார் லிங்கன். டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் காரல்மார்க்ஸ் பெரியார் காந்தி போன்றோருக்கெல்லாம் புத்தகங்கள் வாசிப்பது தான் மிகவும் பிடிக்கும்.

வேதா நிலையத்தில் வீற்றிருந்த தங்கத்தாரகை அம்மா ஜெயலலிதா தங்கள் வீட்டில் தனி லைப்ரரியே வைத்திருந்தார்.அன்னை இறந்தபின் அவருக்கு எல்லாமுமாக இருந்தது புத்தகங்கள் மட்டுமே. ஆனால் இன்று இளைய சமுதாயத்திடம் புத்தகம் வாசிப்பது குறைந்து வருகிறது. முகநூல் மற்றும் இணையம் வாயிலாகப் படிக்கின்றனர். ஆனால் அது நம் கையில் குழந்தையைப் போல் புத்தகங்களை ஏந்தி மெய்மறந்து படித்து கதாபாத்திரங்களாகவே மாறிப் போன காலம் இப்போது இல்லை.

Book reading is the best habit to relax your mind

பெற்றோர்கள் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்குப் பிடித்த தெனாலிராமன் கதைகள் பஞ்சதந்திர கதைகள் முல்லா கதைகள் திருக்குறள் கதைகள் பீர்பால் கதைகள் இராமாயண குட்டிக் கதைகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். புத்தகம் வாசிப்பதால் உடலும் மனதும் புத்துர்ச்சி அடைகிறது. புதுபுது உத்திகளைக் கையாள்வதற்கு புத்தகங்கள் உதவுகிறது.

உங்களுடைய சிறந்த பொக்கிஷம் புத்தகங்கள் தான். புத்தகங்கள் வாசிப்பதால் உங்களால் எதிலும் திறம்பட செயல்பட முடியும். உங்களுக்குச் சிறந்த துணையாக இருப்பது புத்தகங்கள் மட்டுமே. புத்தகங்கள் நல்லா வாசிங்க நல்லதையே வாசிங்க.

English summary
Book reading is the best and only good way to relax your mind and enrich your knowledge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X