தோல்விகளிலிருந்து பாடம் படிப்போம்.. தொடர்ந்து முன்னேறுவோம்

Subscribe to Oneindia Tamil

நிறையப் பேர் நான் தோற்றுப் போய் விட்டேன்.. எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை.. இனி என்ன செய்ய என்று புலம்புவதைப் பார்த்திருப்போம்.. அது நிச்சயம் நமது வளர்ச்சிக்கு கொஞ்சமும் உதவாது.

தோல்விகள்தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். இது புதிய விஷயமே இல்லை.. தொன்று தொட்டு நமக்கு புகட்டப்பட்டு வரும் போதனைதான். ஆனால் பல நேரங்களில் நாம் இதை மறந்து போய் விடுகிறோம். அதுதான் பிரச்சினை.

failures will bring success

ஒன்றில் தோற்றால் என்ன.. அடுத்ததில் வெல்லலாமே.. அதை யாரும் உணர்வது இல்லை. தோல்விகளைத் தூக்கிப் போடுங்கள்.. அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்.. வெற்றிகள் உங்களது காலடியில் வந்து குவியும்.


தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்ற நம்மால் மட்டுமே முடியும். தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள். தோல்விக்கான காரணத்தைக் கண்டறியுங்கள். பின்பு அதை எப்படி சரி செய்வது என்று சிந்தியுங்கள். ஒரு செயலைச் செய்வதற்கு முன் திட்டமிடல் அவசியம். பின் அதைச் செயல்படுத்தும் போது வெற்றியின் இலக்கை எளிதில் அடைய முடியும்.

உலகில் யாரும் ஒரு செயலில் முதல்முறையே வெற்றிக் காண்பதில்லை. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் வெற்றிப் பெறுகிறார்கள். சந்திராயன்-2 முதலில் ஏவிய போது தோல்வி அடைந்தது. ஆனால் அவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சாமல் அதில் ஏற்பட்டுள்ளக் குறைபாடுகளைச் சரி செய்தார்கள். பின் தான் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டு வெற்றியும் கண்டது.

இன்று அனைவரும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறோம். இந்தக் கடினமான சூழலையும் நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம். என் நண்பர் ஒருவர் தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார். அவருக்கு இந்தக் கடினமான சூழலில் வேலை போய் விட்டது. ஆனால் அவர் மனம் தளராமல் வீட்டில் முகக்கவசம் தயாரிக்கிறார். ஆன்லைன் வகுப்புகள் எடுக்கிறார். அதுமட்டுமின்றி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

வாழ்க்கையில் தோல்வி ஏற்படுவது சகஜம். ஆனால் தோல்வியே வாழ்க்கையாகி விடக் கூடாது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள். தோல்வி கற்றுத் தரும் பாடங்களை வைத்து திட்டமிட்டு வெற்றியை அடைவோம். தோல்விகள் முடிவுகள் அல்ல. தோல்வியே வெற்றியின் ஆரம்பம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+