For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Friday Vibes: பூமியே சொர்க்கம்.. செம்மையா வாழ வேண்டும்!

Google Oneindia Tamil News

இறந்த பின் எங்கு போவோம்.. சொர்க்கம் என்பார் சிலர்... நரகம் என்பார் சிலர்.. நாம் செய்யும் காரியத்திற்கேற்ப நாம் போவோம் என்பார் பலர். ஆனால் நாம் வாழும் இந்த வாழ்க்கையை.. அதாவது இந்த நிஜத்தை பலர் மறந்து போய் விடுகிறோம்.

இறந்த பின்னர் என்ன ஆவோம் என்பது நமக்குத் தெரியாது.. ஆனால் வாழும் வாழக்கையை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நிச்சயமாக நம்மால் தீர்மானிக்க முடியும்.. அது சொர்க்கமாக இருக்க வேண்டுமானால்.. வாழும் வாழ்க்கை முழுவதையும் சந்தோஷத்தால் நிரப்புங்கள்.. அமைதியில் அதை பரப்புங்கள்.. உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றிலும் சந்தோஷத்தையும், சந்தோஷம் தருவோரையும் வைத்துக் கொள்ளுங்கள். நெகட்டிவிட்டியை விட்டு விட்டு பாசிட்டிவாக மாறுங்கள்.. வாழ்க்கை சொர்க்கமாக அமையும்.

friday vibes lead the life perfectly

சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம். மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத் தானே நாம் இவ்வளவு சிரமப்படுகிறோம். பூமியில் நமக்குக் கிடைத்த வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும். சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்து வாழ வேண்டும். வானவில்லின் அழகு மழைகளின் சத்தம் பறவைகளின் கூக்குரல் மழலை மொழிகள் அலையின் ஓசை இப்படி எத்தனையோ சந்தோசங்கள் பூமியில் கிடைக்கிறது.

நமக்காகவே வாழும் பெற்றோர்கள் உயிருக்குயிராக இருக்கும் நண்பர்கள் பாசக்கார உறவினர்கள் வீட்டின் செல்வங்களான குழந்தைகள் இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் இதைவிட சந்தோசம் வேறேதும் உண்டா. மழை மேகங்களை ரசியுங்கள். இயற்கை அன்னையை வணங்குங்கள். தாய் தந்தையரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். சிரித்த முகத்துடன் எப்போதும் இருங்கள். நீங்கள் இருக்குமிடம் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்.

நண்பன் இல்லாமல் நானில்லை என்று நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள். இரத்தப் பந்தமில்லாமல் நம்மைப் பற்றி ஆழமாகப் புரிந்துக் கொள்பவர்கள் அவர்களே. அவசர உதவியென்றால் உறவினர்களை விட நான் இருக்கிறேன் நண்பா கவலைப்படாதே என்று நமக்காக ஓடோடி வருபவர்கள் நண்பர்கள்.

பெற்றோர்களிடம் சொல்ல முடியாத விஷயங்களையும் நண்பர்களிடம் சொல்ல முடியும். உங்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக விளையாடுங்கள். வாழ்வின் ஒவ்வெிரு நிகழ்வையும் அணு அணுவாக ரசியுங்கள்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த கோவை மாவட்ட மாணவர்கள் 98.10% பேர் தேர்ச்சிபிளஸ் 1 தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த கோவை மாவட்ட மாணவர்கள் 98.10% பேர் தேர்ச்சி

இருப்பது ஒரு வாழ்க்கை அதனால் முடிந்தவரை எல்லாச் சந்தோசங்களையும் இப்பூமியில் கிடைத்த வாழ்க்கையில் அனுபவித்திட வேண்டும். சந்தோசமா இருங்க உங்களுடன் இருப்பவர்களையும் சந்தோசமா வைத்துக் கொள்ளுங்கள். ஹேப்பி இன்று முதல் ஹேப்பி தான்.

English summary
Friday vibes: We need to lead the life perfectly and happily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X