Monday Motivation: முக மலர்ச்சியுடன்.. மண்டேவை வரவேற்போமே!

Subscribe to Oneindia Tamil

மகளிர் தினத்தை கொண்டாடி முடிச்சாச்சு.. மறுபடியும் ஓடத் தொடங்கி விட்டனர் மகளிர். இன்று திங்கள்கிழமையும் வந்தாச்சு.. அனைவருமே சோர்வும் சுறுசுறுப்பும் கலந்த கலவையாக வாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் வாழ்க்கை அழகானதுங்க.. அருமையானதும் கூட. யாருக்கும் கிடைக்காத பிறவி மனிதப் பிறவிதான். ஆனால் இன்று அதை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் எத்தனை பேர் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறோம். பெரும்பாலானவர்களும் ஏதோ ஒரு சலிப்புடன்தான் வண்டியை ஓட்டிக் கொண்டுள்ளனர். ஆனால் அது தேவையில்லைங்க.

ரசித்த வாழ வேண்டும்.. எது கிடைத்தாலும் அதை நமக்கு சாதகமாக பார்க்கும் பழகும் பக்குவம் மனசுக்கு வேண்டும். அப்பதாங்க வாழ்க்கை ருசிக்கும்,. சாப்பாடு மட்டும் ருசித்தால் போதுமா.. வாழ்க்கையும் ருசிக்க வேண்டாமா.. ருசியான வாழ்க்கைக்கு பக்குவமான மனசு வேண்டும்ங்க. சில பேரு இருக்காங்க அவர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்னத்த சொல்றது ஏதோ இருக்கேன் என்பார்கள்.

 ஒருமுறைதான் வாழ்க்கை

ஒருமுறைதான் வாழ்க்கை

வாழ்க்கை என்பது அனைவருக்கும் ஒரு முறை தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் நாம் ரசித்து வாழ வேண்டும். காலையில் எழுந்தவுடன் அனைவருக்கும் காபி குடிக்கும் பழக்கமுண்டு. அந்தக் காபியை காலையில் வெளியே வந்து இயற்கையை ரசித்துக் கொண்டு இதமான காலைத் தென்றல் நம் உடலை வருட அந்தக் காபியின் ஒவ்வொரு சொட்டையும் ரசித்து ருசித்துக் குடித்துப் பாருங்கள். அப்போது தெரியும் வாழ்க்கையின் சந்தோஷம்.

 பிடித்ததை செய்யுங்கள்

பிடித்ததை செய்யுங்கள்

உங்களுக்குப் பிடிச்ச கலர்ல உங்கள் ஆடையை அணியுங்கள். அது உங்களுக்குப் பாசிடிவ் எனர்ஜியைத் தரும். அந்த எனர்ஜியோடும் முகத்தில் புன்னகைத் தவழ உங்கள் அலுவலகத்திற்குச் செல்லுங்கள். போகும் வழியில் உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்லுங்கள். நல்லா பிரஷ்ஷா எனர்ஜடிக்கா இருப்பீங்க.

 முகம் நிறைய மலர்ச்சி

முகம் நிறைய மலர்ச்சி

அலுவலகத்தில் நுழையும் போது முகமலர்ச்சியோடு உங்களுடன் வேலைப் பார்ப்பவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லுங்கள். உங்களால் உங்களைச் சுற்றியிருப்பவரும் எனர்ஜடிக்காக மாறிவிடுவார்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்கள் நிறைய இருக்கு. அது அத்தனையையும் ரசியுங்கள். குழந்தைகள் இருந்தால் அந்த இடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். எப்பவும் சுறுசுறுப்போடு பம்பரமாகச் சுழன்றுக் கொண்டிருப்போம். அவர்களைப் போல ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். உங்கள் வேலை நேரத்திற்கிடையே சிறிது பிரேக் எடுத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் நேரம் செலவிடுங்கள்.

 அனுபவிங்க

அனுபவிங்க

நல்லா வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. ஒவ்வொரு செயலும் செய்யும் போது ரசித்துச் செய்யுங்க. வேலை என்பது எப்பவும் தாங்க இருக்கு அதையே நாம ரசித்து செய்தா அது நமக்கு ஒரு சிரமமாகவே தெரியாது. வாழ்க்கை என்பது ஒரு முறை தாங்க. நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள். என்னங்க புத்துணர்ச்சியோடு உங்கள் வேகைளைச் செய்ய கிளம்பிட்டிங்களா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+