Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | கனவுநிலை உரைத்தல் | நனவினான் நல்கா தவரைக் திருக்குறள்

நனவினான் நல்கா தவரைக் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1213 நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
— மு. வரதராசன்

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது
— கலைஞர்

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
— சாலமன் பாப்பையா

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது
— புலியூர்க் கேசிகன்

நிகழும் காலத்தில் நெருங்காதவரை கனவில் கண்டு உறவாடுவதால் இருக்கிறது என் உயிர்.
— சிவயோகி சிவகுமார்

நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது. இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரணமுண்டா என்றவாறு. இது 'உறங்கினால் காணலாமோ' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
— மணக்குடவர்

(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.).
— பரிமேலழகர்

English Couplet:

Him, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes!.

Couplet Explanation:

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

Transliteration (Tamil to English):

nanavinaal nalkaa thavaraik kanavinaal
kaantalin unten uyir

மொத்தம் 133 அதிகாரங்கள்
1213 of 1330

மேலும் கனவுநிலை உரைத்தல் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+