Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | கனவுநிலை உரைத்தல் | நனவினான் நல்காக் கொடியார் திருக்குறள்

நனவினான் நல்காக் கொடியார் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1217 நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
— மு. வரதராசன்

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
— கலைஞர்

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
— சாலமன் பாப்பையா

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும் நம்மை வருத்துவது தான் எதனாலோ?
— புலியூர்க் கேசிகன்

நேரில் நாடி வராத கொடியவர் கனவில் வந்து ஏன் என்னை வருந்தச் செய்வது.
— சிவயோகி சிவகுமார்

நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு? இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.
— மணக்குடவர்

(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம்', என்பதாம்.).
— பரிமேலழகர்

English Couplet:

The cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams?.

Couplet Explanation:

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?.

Transliteration (Tamil to English):

nanavinaal nalkaak kotiyaar kanavanaal
en-emmaip peezhip padhu

மொத்தம் 133 அதிகாரங்கள்
1217 of 1330

மேலும் கனவுநிலை உரைத்தல் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+