தமிழகத்தில் இன்று
துபாய்:
இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யும் 10 கம்பெனிகளுக்கு அரபுநாடுகள் தடை விதித்துள்ளது.
டெல்லி, மும்பை, ஹைதராபாத், மற்றும் இதரப் பகுதிகளிலிருந்து ஏற்றுமதி செய்யும் கம்பெனிகள் அனைத்தும் இறைச்சி ஏற்றுமதி செய்யக் கூடாதுஎன்று அரபு நாடுகள் கூறியுள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை இறக்குமதி செய்வதால் எங்கள் நாடுகளுக்கு எந்த வித லாபமும் கிடைப்பதில்லை.
இதுகுறித்து அரபுநாடுகள் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், எங்கள் நாட்டிலிருந்து பரிசோதகர்கள் இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு சென்று அவர்கள்ஏற்றுமதி செய்யும் இறைச்சி வகைகளை நன்கு பரிசோதனை செய்த பின் எது எங்கள் நாட்டுக்குத் தேவை என்று அறிந்து கொள்கிறார்கள்.
அந்தச் சோதனைகளை அடுத்துத் தான் எங்கள் நாட்டிற்கு வரும் தேவையற்ற பொருட்களின் ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.