தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹெலிகாப்டர், கடற்படை முயற்சித்தும் தடுக்க முடியாத தற்கொலை

கொச்சி:

உடல் ஊனமுற்ற ஓய்வுபெற்ற ரயில் ஊழியர் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் பெயர் கே.கே.நாராயணன்.

இவர் கேரள மாநிலத்தில் கொச்சியில் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்ற போது ஹெலிக்காப்டரில் சென்று கொண்டிருந்த கடற்படை துணைகமான்டோ ஒருவர் பார்த்தார். உடனடியாக அவர் தன்னிடம் இருந்த மொபைல் போன் மூலம் எல்லா இடங்களுக்கும் தொடர்பு கொண்டு அவரைக்காப்பாற்ற முயற்சி எடுத்தார்.

ஆனால் அவரது முயற்சிகள் எதுவுமே பலிக்கவில்லை. ஆயினும் கடற்படை ஊழியர்கள் ஆற்றுக்குள் குதித்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.தண்ணீரில் மூழ்கிக் கிடந்த அவரை மீட்டு சஞ்சீவாணி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவர் அதற்குள் இறந்து விட்டார். ஹெலிக்காப்டரில் சென்று கொண்டிருந்த கமான்டோ அவரைக் காப்பாற்ற முயன்ற இச்சம்பவம் அப்பகுதிமுழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

யு.என்.ஐ.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற