For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
யாழ்பாணத்தை வெல்கின்றனர் புலிகள்: பயங்கர தாக்குதல் தொடர்கிறது

கொழும்பு:

எந்த நேரத்திலும் யாழ்பாணம் விடுதலைப் புலிகளின் கையில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு நடக்கும் கடும் சண்டையில் ராணுவத்தினரை பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகள் பின்வாங்கச்செய்துவிட்டனர். பல இடங்களில் ராணுவம் தங்களது ராணுவ தளங்களை விட்டு வெளியேறிவிட்டது.

அந்தப் பகுதிகளை புலிகள் கைப்பற்றிவிட்டனர்.

புலிகள் இரவு பகலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் யாழ்பாணத்தின் புறநகர் பகுதிக்குள்நுழைந்துவிட்டனர். விரைவில் நகரின் மையப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் நுழைந்துவிடுவர் என்று தெரிகிறது.

இதையடுத்து அங்கு பெரும் போர் நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காகயாழ்பாணத்தைவிட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் கொழும்புவிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. யாழ்பாணம் விடுதலைப் புலகளின் கையில் போய்விடும் எனஅஞ்சும் இலங்கை அரசு கொழும்புவிலும் புலிகள் அடுத்து தாக்குதல் நடத்தலாம் எனக் கருதுகிறது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்புவில் உள்ள தமிழர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று உததரவிடப்பட்டுள்ளது. வீட்டுக்குவெளியே செல்லும்போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தங்களை அரசு அன்னிய நாட்டவர் போல நடத்துவதாகவும் தங்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பதாகவும்தமிழர்கள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து இலங்கை செய்தித்துறை அமைச்சர் கூறுகையில், கொழும்புவில் குண்டு வெடிப்பு போன்றசம்பவங்களை தடுத்து நிறுத்தவே முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்குசிரமம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், துரதிஷ்டவசமாக வெடிகுண்டுகளை ஏந்தி வருபவர்களில்பெரும்பான்மையினர் தமிழர்கள் தான். இதனால் தான் இது போன்ற கடும் நிலையை அரசு எடுக்கவேண்டியதாகிவிட்டது.

இது தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் எங்களின் பாதுகாப்புக்காகவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X