For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில்தேவ் தான் - மனோஜ் பிரபாகர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

எனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில் தேவ்தான் என்று மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார்.

1994-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மோசமாக விளையாடும்படியும்அப்படி விளையாடினால் ரூ.25 லட்சம் கொடுப்பதாகவும் இந்திய அணி வீரர் ஒருவர் தன்னிடம் கூறியதாகமுன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கூறியிருந்தார்.

அது தவிர, மேலும் பல வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால், சூதாட்டத்தில்ஈடுபட்ட பெயரின் பெயர்களையோ, தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்த வீரரின் பெயரையோ அவர்வெளியிடவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய குற்றச்சாட்டை அவர் கூறினார்.

மனோஜ் பிரபாகரின் குற்றச்சாட்டுகளை அடுத்து நீதிபதி சந்திரசூட் விசாரணைக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியம் உத்தரவிட்டது. அப்போதும், வீரர்களின் பெயரை பிரபாகர் கூறவில்லை. விசாரணை நடத்திய நீதிபதியும்,இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்ஹான்ஸி குரோனியே பிடிபட்டார். இதையடுத்து, மனோஜ் பிரபாகரின் குற்றச்சாட்டுகள் மீண்டும் பரப்பரப்புக்குஉள்ளாகின. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது, கிரிக்கெட் சூதாட்டம்குறித்து சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந் நிலையில், மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில் தேவ்தான் என்று இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா குற்றம் சாட்டினார். ஆனால், இக் குற்றச்சாட்டைகபில் தேவ் திட்டவட்டமாக மறுத்தார். பிந்த்ரா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் கூறினார். அதேநேரத்தில், தான் கபில் தேவ் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று பிந்த்ரா கூறினார்.

சமீபத்தில் கூடிய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுவில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிய பிந்த்ராவுக்குநோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டு, நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த நோட்டீஸுக்குபிந்த்ரா அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்ற வாரியத்தின் தலைவர் ஏ.சி. முத்தையா எச்சரித்தார். மேலும், தான் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பானஉண்மைகளை பிரபாகர் உடனே வெளியிடவேண்டும். இல்லையென்றால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் முத்தையா தெரிவித்தார்.

இதற்கிடையே, சிபிஐ அலுவலகத்துக்கு புதன்கிழமை நேரில் ஆஜரான மனோஜ் பிரபாகர், தான் கூறியகுற்றசசாட்டுகள் குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். இந் நிலையில், இன்டர்நெட் நிறுவனத்துக்கு அளித்தவிடியோ பேட்டியில் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில்தேவ் தான் என்ற தகவலை பிரபாகர்தெரிவித்தார்.

எனக்கு லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முன் வந்தது குறித்து அப்போதைய கேப்டன் அசாருதீன் மற்றும்பயிற்சியாளர் அஜித் வடேகர் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதுபற்றி ஆச்சரியப்படவோ,கவலைப்படவோ, அதிர்ச்சியடைவோ இல்லை. அது எனக்குப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது என்றார் பிரபாகர்.

நான் குளியலறையில் ஷேவ் செய்து கொண்டிருந்தேன். நவ்ஜோத் சித்து உடன் இருந்தார். அப்போது அங்கு வந்தகபில்தேவ், எனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தார். ஸ்பான்சர்ஷிப்புக்காக இந்தப் பணம் தரப்படுகிறது என நான்கருதினேன். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாம் தோற்கவேண்டும். அதற்காக மோசமாக பந்துவீசவேண்டும் என்று கபில் தேவ் கூறினார்.

இது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. என்னை பாகிஸ்தானுக்கு விற்க விரும்புகிறீர்களா என்று கேட்டுவிட்டு,அதற்கு நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டேன். நான் கபிலைப் பார்த்து கத்தியதைப் பார்த்து பக்கத்துஅறையில் இருந்த பிரசாத் வைத்யா, நயான் மோங்கியா ஆகியோர் நாங்கள் இருந்த அறைக்கு ஓடிவந்து என்னநடந்தது என்று கேட்டனர்.

நான் சொன்ன இந்தத் தகவல்கள் எல்லாம் உண்மை. பொய் அறியும் கருவி முன் வந்து நின்று இதைத்தெரிவிக்கவும் நான் தயாராக உள்ளேன். கபில் தேவின் செயல் பற்றி மறுநாள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரிஆகியோரிடம் தெரிவித்தேன். பாகிஸ்தானுடனான போட்டி மிகவும் முக்கியமானது. ஆகவே, நன்றாகவிளையாடவேண்டும் என்று கவாஸ்கர் அறிவுரை கூறினார்.

இத்தனை நாள் இந்த உண்மையைச் சொல்லாததற்குக் காரணம் உண்டு. நடந்த உண்மையை கபில்தேவ் தானாகமுன் வந்து சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் எதையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நானாகமுன் வந்து இப்போது இதைத் தெரிவிக்கிறேன்.

கடவுள் உண்டு என்று கபிலுக்குத் தெரியும். அதுவும் ஒரே கடவுள். எனக்கும், கபிலுக்கும் இடையே என்ன நடந்ததுஎன்பதை அவர் அறிவார். நான் இப்போது சொன்னது உண்மைதான் என்பதை இனி அசாருதீன், வடேகர், சித்து,வைத்யா, மோங்கியா, கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர்தான் விளக்க வேண்டும்.

இது தொடர்பாக எனக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய இவர்கள் அனைவரும் பின்னர் ஏதோ காரணத்துக்காகபின் வாங்கிவிட்டனர். முக்கிய தகவலாக, இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன்டால்மியாவிடமும் கூறினேன். ஆனால், அதை அவர் முக்கியமாகக் கருதவில்லை என்றார் பிரபாகர்

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X