
தமிழகத்தில் இன்று
பாரத் மிகுமின் நிறுவனத்துக்கு (பெல்) ஏற்றுமதியாளர் விருது கிடைத்துள்ளது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக இந்த விருதைப் பெற்று பெல் நிறுவனம் சாதனைபடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன நிறுவனங்களின் ஏற்றுமதி அளவைப் பொறுத்து ஆண்டு தோறும் ஏற்றுமதியாளர் விருதுவழங்கப்படுகிறது. இந்த விருதை, பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் வழங்கி வருகிறது.
1998-99-ம் ஆண்டுக்கான இந்த விருதை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த விருதை, பெல் நிறுவனத் தலைவர் கே.ஜி. ராமச்சந்திரனிடம், மத்தியவர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் புதன்கிழமை வழங்குகிறார்.
சர்வதேச மார்க்கெட்டில் பலத்த போட்டி நிலவிய போதிலும், பெல் நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு ஏற்றுமதி வாய்ப்பைப் பெற்றதுகுறிப்பிடத்தக்கது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும், இரண்டரை மடங்கு அதிகமாகும்.
பெல் நிறுவனத்துக்கு தென் ஆப்பிரிக்கா, கிரீஸ், ஜோர்டான், ஓமன், ஜெர்மனி, அமெரிக்கா, சிரியா போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
1999-2000-ம் ஆண்டில் ரூ.703 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டர்களை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும், 181 சதவீதம்அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.