For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜடேஜா வங்கி லாக்கரை குடைந்தெடுத்த வருமானவரித்துறை

By Staff
Google Oneindia Tamil News

பால் தாக்கரேவின் குற்றம் 1993-ல் நடந்தது. இப்போது ஏழு வருடமாகிறது. ஆகையால்தான் இது காலக்கெடுவைக் கடந்தது என்றும்,நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ராம் ஜெத்மலானியும், அருண் ஜேட்லியும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி இது பாதி உண்மைதான். மீதிப் பாதியைப் பார்ப்போம்.

மூன்று வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை பெறக் கூடிய குற்றங்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதற்கு, எந்தக் காலக் கெடுவையும் சட்டம்விதிக்கவில்லை.

பால்தாக்கரே மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு, மூன்று வருடத்திற்கு மேலாக சிறைத் தண்டனை பெறக்கூடிய குற்றத்தைச் சுமத்தினால், அதுஇந்தக் காலக்கெடு நிர்பந்தத்தில் சிக்காது.

இது ஒருபுறமிருக்க, மூன்று வருட சிறைத் தண்டனை பெறக்கூடிய குற்றம் தான் அவர் மீது சுமத்தப்படுகிறது என்றே கூட வைத்துக் கொள்வோம். காலம்தாழ்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிற போது, கால தாமதம் நேரிட்டதற்கான காரணங்களை அரசு தரப்பு விளக்கும்.

அந்த விளக்கத்தை நீதி மன்றம் ஏற்கலாம். தவிர, நீதி நிலை நாட்டப்படுவதற்கு வழக்கு நடப்பது அவசியம் என்று நீதிமன்றம் நினைக்கலாம்.நீதிமன்றத்தின் பார்வை அப்படி அமைந்தால், காலக்கெடு கடந்துவிட்டது என்ற ஆட்சேபம் செல்லுபடியாகாது.

அதாவது நீதிமன்றம் அனுமதித்தால்,காலம் தாழ்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளும் சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெறும். இந்த உண்மைகளை ராம்ஜெத்மலானியும், அருண் ஜேட்லியும் கூறவில்லை.

குற்றம் சுமத்தப்படுகிற பால் தாக்கரேவின் பிடிக்குள் இருந்த சிவசேனை - பா.ஜ.க,. அரசு, இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமலே இருந்தது.தன் செல்வாக்கிற்கு அடங்கிய ஆட்சியைப் பயன்படுத்தி, தன் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையைத் தடுத்து நிறுத்திய பால் தாக்கரே, இப்போதுதாமதமாகி விட்டது என்ற ஆட்சேபணையை எழுப்புவது ஏற்கப்படக் கூடியது அல்ல.

மதக் கலவரத்திற்குக் காரணமானவர்களும், அதைத் தூண்டி விட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது தான் பொது நன்மைக்கு உகந்தது என்றுப்ராசிக்யூஷன் தரப்பு வாதாடினால், நீதிமன்றம் இந்த விளக்கத்தை ஏற்கக் கூடிய வாய்ப்பு உண்டு. அப்போது காலக்கெடு மீறப்பட்டது என்ற சுமை இந்தவழக்கை பாதிக்காது.

சட்டத்தின் நிலை இப்படியிருக்க, பால் தாக்கரே போன்றவர்களின் மிரட்டல்களுக்குப் பயந்து, கூட்டணி ஆயுளை நினைத்து கவலை கொண்டு, நியாயத்திற்குவிரோதமாக இயங்கத் தொடங்குவது,- பா.ஜ.க. வின் நற்பெயருக்கு நல்லதல்ல.

தன்னுடைய அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலி ஆதரவாளர்களை பா.ஜ.க.சகித்துக் கொள்ளலாம் - சமூக விரோத செயல்களில்ஈடுபடுவதைப் பெருமையாக நினைக்கிற பால் தாக்கரேயும் சகித்துக் கொள்ளலாம்.

ஆனால், பா.ஜ.க. வின் இந்த அலாதியான சகிப்புத்தன்மை, மற்றவர்களின் பொறுமையைச் சோதிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் தான் சுப்ரீம்கோர்ட் ஒரு நாகரிகமான அரசு செயல் படுகிற விதம் இதுவல்ல என்று கூறி, இவ்விஷயத்தில் பா.ஜ.க.வின் தடுமாற்றத்தைச் சாடியிருக்கிறது.

மக்களின் பொறுமைக்கும் ஒரு காலக்கெடு உண்டு. அதை மீறுவது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X