For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன், தமிழ்த் தீவிரவாதிகளைப் பிடிக்க களமிறங்குகிறது மத்திய அரசு..?!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்த் தீவிரவாதிகளையும் அவர்களது நடவடிக்கைகளையும் மிக உன்னிப்பாககவனிக்க ஆரம்பித்திருக்கிறது தமிழக் காவல் துறை.

தமிழ்த் தீவிரவாதிகளின் காட்பாதரான கலியபெருமாள், அடுத்து தமிழரசன், அடுத்துஇளவரசன், ராமசாமி, மாறன் இப்படி ஒவ்வொருவரும் தீவிரவாத இயக்கங்களுக்குப்பொறுப்பேற்று அதன்பிறகு நடக்கும் அசம்பாவிதங்களுக்குப் பிறகே தனதுநடவடிக்கையில் இதுவரை தமிழகப் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த இருபது ஆண்டுகளாக இப்படி திடீர் திடீரென விழித்துக்கொண்டு தங்களதுநடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.

ஆனால், வீரப்பன் விவகாரத்துக்கு முன்பு, தமிழ்த் தீவிரவாதி மாறன் பற்றி ஏற்கெனவேகாவல்துறையினர் உஷாராக இருந்தாலும் இப்பொழுதுதான் மாறனின் முழுமையானசெயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தமிழ்த் தீவிரவாதிகளின்பட்டியலை போலீஸார் இப்போது தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

யார் யார் இந்த இயக்கத்தில் இருந்தார்கள். தீவிரவாத இயக்கத்தில் இருந்தஇளைஞர்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விபரங்களைத்திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் பின்னணியில் இதுவரை செயல்பட்டவர்கள்பற்றியும் குறிப்புகள் தயாராகிக்கொண்டு வருகிறது. ஆங்காங்கே சிலரைத் தேடிப்பிடித்து போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

இதே நேரத்தில், வீரப்பன் விடுதலை செய்யச் சொல்லும் தமிழ்த் தீவிரவாதிகள்வீரப்பனுடன் காட்டுக்குள் சென்று என்ன செய்யப்போகிறார்கள். அவர்களுடையதிட்டம் என்ன என்பது பற்றியும் கவலையோடு ரகசியமாக விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வீரப்பனுடன், தற்பொழுது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பற்றியும்கவலையோடு இருக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஒரு காவல்துறை அதிகாரி, ராஜ்குமார்விடுதலையானதும் மக்களின் பிரச்சினை முடிந்துவிடும்.

ஆனால் அதற்குப் பிறகுதான் எங்களுக்கு வேலையே இருக்கிறது. வீரப்பனையும்அவனுடன் இருப்பவர்களையும் உடனே பிடிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில்நிலைமை விபரீதமாகிவிடும் என்று கவலைப்பட்டார் அந்த அதிகாரி.

இதற்கிடையில், மத்திய அரசும் ராஜ்குமார் விடுதலைக்குப் பிறகு வீரப்பனை எப்படிபிடிப்பது என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஒரு கிரிமினலைப்பிடிக்க ராணுவமா என்று ராணுவ அதிகாரிகள் கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள்.

கடந்த பதினைந்து வருடமாக வீரப்பனை ஏன் இரு மாநில அரசுகளாலும் இதுவரைபிடிக்கமுடியவில்லை என்றும் தீவிரமாக ஆலோசனைகள் நடத்திமுடித்திருக்கிறதாம்மத்திய அரசு.

இறுதியில், 6000 கிலோமீட்டர் அடர்ந்த காடுதான் வீரப்பனின் பலம்.அதுமட்டுமல்லாமல், வீரப்பனைப் பிடிக்கும் பணியில் தமிழக, கர்நாடக அதிகாரிகள்ஈடுபட்டது போதும், புதியதாக ராணுவ அதிகாரிகள் களமிறங்கட்டும் என்றும் மத்தியஅரசு யோசித்திருக்கிறதாம்.

இதுவரை, மிகக் குறைந்த நபர்களோடு இருந்த வீரப்பன், இப்போது புதிய புதியவார்த்தைகளைக் கூறுகிறான். இயக்கம் என்கிறான், தமிழ்த் தீவிரவாதம் என்கிறான்.

இதை இப்படியே விட்டால் நாளை காஷ்மீர் தீவிரவாதிகள் மாதிரி தமிழ்த்தீவிரவாதிகள் வளர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை உடனே நிறுத்தியாகவேண்டும். இதற்கு என்ன செலவு ஆகும். என்ன மாதிரியான திட்டங்களைத்தீட்டவேண்டும் என்று தீவிரமாக யோசித்திருக்கிறார்கள்.

ஹெலிக்காப்டர், 500 அதிரடி ராணுவ காமாண்டோக்கள், நவீன ஆயுதங்கள்,வீரர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு போன்ற பல விஷயங்கள் நன்றாக ஆராய்ந்துஅலசப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு மாதம் 12 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.ஒரு மாதம் என்பதெல்லாம் மிக அதிகம். பதினைந்தே நாட்களுக்குள் பிடித்துவிடலாம்என்று யோசித்திருக்கிறதாம் மத்திய அரசு.

இதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ராஜ்குமார் வெளியே வரும் வரைஅமைதியாகவே செயல்படுங்கள். பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றுசொல்லிவிட்டது மத்திய அரசு.

மேலும் கர்நாடகா, தமிழக அதிகாரிகள் இந்த ஆபரேஷனில் வரவே கூடாது என்றும்கூறிவிட்டதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X