For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்டம் நடத்திய 1,000 அ.தி.மு.கவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் திமுக அரசைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டம் நடத்திய 1,000 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கடந்த முறை போல் தமிழகத்தில் இதுவரைவன்முறை எதுவும் நடைபெறவில்லை.

இதற்கிடையில் நாளை (10ம் தேதி) சென்னையில் கூடவிருந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது வைக்கப்பட்டுள்ளது.

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு அதிகபட்சமாக 3 மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அவர் மீதுதொடரப்பட்ட ஊழல் வழக்குகளில் பெறும் இரண்டாவது தண்டனை.

ஏற்கனவே கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனைவழங்கப்பட்டது. இவ்வழக்கில் இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆண்டு சிறை அவருக்கு விதிக்கப்பட்டாலும், ஏககாலத்தில்அதை அனுபவிக்க வேண்டும் (ஒரே நேரத்தில் இரு சிறை தண்டனைகள், அதாவது ஒரே ஆண்டில் இரு ஆண்டுகளுக்கானதண்டனையை அனுபவிக்க உத்தரவு) என்று நீதிபதி உத்தரவிட்டதால், தேர்தலில் போட்டியிடும் பிரச்னையில் இருந்து தப்பினார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஊழல் வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. எனவே டான்சி வழக்கில் இருந்தும் அவர் தப்பித்து விட வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் போகாதகோவில் இல்லை.

திங்கள்கிழமை காலை கிடைத்த தகவல்படி 13 மாதச் சிறை தண்டனை தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் தனிநீதிமன்றத்திற்கு சென்றனர். ஆனால், தீர்ப்பு 5 ஆண்டுகள் வரையில் சென்று விட்டதால் ஜெயலலிதா அதிர்ந்து போனார். சிறுத்துப்போன முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவரிடம் கருத்து கேட்க முயன்ற செய்தியாளர்களிடம் கூட பேசாமல்சென்று விட்டார்.

தீர்ப்பு பற்றி தகவல்கள் வெளியே பரவியதும் தமிழக அரசையும், திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியையும் கண்டித்துநீதிமன்ற வளாகத்தின் முன் கூடியிருந்த அ.தி.மு.கவினர் கோஷங்கள் எழுப்பினர்.

ஏற்கனவே எந்த அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருந்தபோலீசார், அதிமுகவினரை கைது செய்தனர். மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் அரசை எதிர்த்துபோராட்டங்களில் ஈடுபட முயன்றனர்.

அவர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை, கடந்த முறை கொடைக்கானல்ஹோட்டல் வழக்கில் தீர்ப்பு வெளியானதும் அதிமுவினரால் மாநிலம் முழுவதும் வன்முறை ஏற்பட்டது.

தர்மபுரியில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சுக்கு அ.தி.மு.கவினர் தீ வைத்தனர்.இதில் 3 அப்பாவி மாணவிகள்உயிரோடு கருகினர். இந்த சம்பவம் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்தஇடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வியடைந்தது.

இதனால் இம் முறை எந்த வன்முறையிலும் அதிமுகவினர் ஈடுபடவில்லை. ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில்ஓய்வில் இருக்கும் முதல்வர் கருணாநிதியும் திங்கள்கிழமை கோட்டைக்கு வரவில்லை.

தீர்ப்பு காரணமாக சாலையில் பதட்டம் ஏற்படலாம் என்று அவருக்கு போலீசார் யோசனை கூறியதாகவும் தெரிகிறது. மேலும்தீர்ப்பு பற்றி முதல்வரின் கருத்தை அறிய செய்தியாளர்கள் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது.

இச்சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு நாளை 10ம் தேதி ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கூடுவதாக இருந்தது.இது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஜெயலலிதா உள்ளிட்ட அவரதுஅமைச்சரவை சகாக்கள் மீது 47 ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை விசாரிப்பதற்கெனவே மூன்று தனிநீதிமன்றங்களை திமுக அரசு ஏற்படுத்தியது.

இந்த வழக்குகளில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வழக்குகள் மட்டும் 6. அதில் டான்சியையும் சேர்த்து 2 வழக்குகளில் ஜெயலலிதாகுற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர நிலக்கரி இறக்குமதி வழக்கு, கலர் டி.வி. ஊழல் வழக்குகளில்ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

நிலக்கரி இறக்குமதி வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடுசெய்தது. அதை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்தது தவறு என்று கூறியுள்ளது.

இன்னும், வருமானத்தை மீறி சொத்துச் சேர்த்த வழக்கு, ஸ்பிக் பங்குகளை தனியாருக்கு விற்ற வழக்கு ஆகியவைஜெயலலிதாவுக்கு சவாலாக நீதிமன்றத்தில் உள்ளன.

47 வழக்குகளில் இதுவரை 12 வழக்குகள் தீர்ப்பு கூறப்பட்டு விட்டன. இந்த 12 தீர்ப்புகளில் ஜெயலலிதாவை தவிர, அதிமுகமாஜி மந்திரிகளான சேடபட்டி முத்தையா, செல்வகணபதி, மதுசூதனன், பொன்னுசாமி, செங்கோட்டையன், நாகூர் மீரான்,முன்னாள் பெண் எம்எல்ஏ மல்லிகா ஆகியோரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இன்பசாகரன், ஹரிபாஸ்கர் போன்றவர்களும் சிறைத்தண்டனை பெற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X