For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க சாலை விபத்தில் 4 இந்திய மாணவர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

ஜெர்சி சிட்டி அருகே நடந்த சாலை விபத்தில் 4 இந்திய மாணவர்கள் இறந்தனர்.ஒருவர் மாணவி படுகாயமடைந்தார்.

இறந்தவர்கள் பெயர் விவரம்: ராகுல் படேல் (18), தாவல் படேல் (17), அங்கிட்பாண்ட்யா (18), சிராக் படேல் (17) ஆகியோர் இறந்தனர். மாணவி பல்லவிசலவாடியா (18) படுகாயமடைந்தார்.

ஜெர்சி சிட்டி ரூட் 7ல் இந்த விபத்து நடந்தது. இவர்கள் சென்று கொண்டிருந்த டயோடாகரோலா காரும் டிராக்டர் டிரைலரும் மோதிக் கொண்டதில் இந்த துக்ககரமான சம்பவம்நடந்தது.

இவர்கள் அனைவரும் ஜெர்சி சிட்டியைச் சேர்ந்தவர்கள். விட்பெண் பாலம் அருகேஇவர்களின் கார் பாதையைவிட்டு விலகி கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தபோக்குவரத்தில் நுழைந்தது. அப்போது அங்கு வந்த டிராக்டர் கார் மீது மோதியது.

இதில் 3 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். சிராக் படேல் ஜெர்சி சிட்டி மெடிக்கல்சென்டரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பல்லவி சலவாடியா நியூயார்க்யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சேர்க்க்பட்டுள்ளார்.

அவரது நிலைமை மிகக் கவலைக்கிடமாகவே உள்ளது.

காரை ராகுல் படேல் ஓட்டிச் சென்றார். டிராக்டரை ஓட்டிக் கொண்டு வந்தவர்மியாமியைச் சேர்ந்த ஜோஸ் மார்ட்டின் மாடமரோஸ். இவர் நார்ட் பெர்ஜென் டிரக்கிங்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மீது எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை.

விபத்து நடந்த இடம் மிகக் கொடுமையாக இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.காரிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. காரின் கதவை உடைத்து அந்தமாணவியை வெளியே கொண்டு வந்தோம் என்றனர்.

இந்த ஐந்து பேரும் டிக்கின்சன் உயர் நிலைப் பள்ளியில் படித்தவர்கள். இதனால் அந்தப்பள்ளியே சோகத்தில் மூழ்கியுள்ளது. மாணவர்கள் நினைவுக் கூடத்தை அமைத்துஅஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பள்ளியின் வெளியே இந்தியக் கொடியும் அறைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் உறவினர்களும்,நண்பர்களும் விபத்து நடந்த இடத்தில் போராட்டம் நடத்தினர். இந்த இடம் மிகஆபத்தாக இருப்பதாகவும் சாலையைப் பிரிக்கும் தடுப்பே இல்லை எனவும் அவர்கள்புகார் கூறினர்.

இந்தப் போராட்டத்தால் ரூட் 7ல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த இடத்தில் இன்னும் ஒரு குழந்தை கூட இறக்கக் கூடாது. தயவு செய்து சாலையைசரி செய்யுங்கள். இல்லாவிட்டால் இந்த இடத்திலேயே உண்ணாவிரதப் போராட்டம்நடத்துவேன் என அங்கிட்டின் பெற்றோர் கூறினர்.

இந்த மாணவர்களின் இறுதி யாத்திரை வியாழக்கிழமை நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X