மீண்டும் சாதனை படைக்கத் துடிக்கிறோம் - மகேஷ் பூபதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

டென்னிஸ் விளையாட்டில் நானும் லியாண்டர் பயஸும் மீண்டும் சாதிக்கத்துடிக்கிறோம் என்று மகேஷ் பூபதி தெரிவித்தார்.

பெங்களூரில் டிசம்பர் மாதம் ஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்போட்டி நடைபெற உள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில்மகேஷ் பூபதியும், லியாண்டர் பயஸும் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் பெங்களூரில் உள்ள கர்நாடக மாநில லான் டென்னிஸ் சங்கத்தில்நிருபர்களிடம் மகேஷ் பூபதி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பெங்களூரில் நடைபெற உள்ள ஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்போட்டியில் விளையாட உள்ளதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நானும், லியாண்டர் பயஸும் மீண்டும் இணைந்து விளையாடி வருகிறோம். இனிநாங்கள் எல்லா போட்டிகளிலும் கவனம் செலுத்தி பழையபடி உலகின் முதல்இடத்தைப் பிடிக்கப் போராடுவோம்.

பெங்களூரில் நடைபெற உள்ள போட்டியில் பட்டம் வெல்வதை நாங்கள் இலக்காகக்கொள்ளவில்லை என்றாலும் நாங்கள் அப் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.

ஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் பாஸல்,பாரீஸ், லியோன், ஸ்டாக்ஹோம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள போட்டிகளில்நானும், லியாண்டர் பயஸும் இணைந்து விளையாட உள்ளோம்.

பெங்களூர் போட்டிகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவோம்.ஏனெனில் இதற்கு முன் இந்தியாவில் நடந்த போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்.

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கோல்ட் பிளேக் போட்டியில் கடந்தமூன்று ஆண்டுகளாக நாங்கள் பட்டம் பெற்று வருகிறோம். யாரிடமும் நாங்கள்தோற்கவில்லை.

உள்நாட்டு ரசிகர்களுக்கு முன்பு நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம்.பெங்ளூரிலும் அவ்வாறு விளையாடி வெற்றி பெறுவோம். இப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளையும் நாங்கள் எளிதாகக் கருதவில்லை என்றார்பூபதி.

மகேஷ் பூபதியும், லியாண்டர் பயஸும் ஒரே ஆண்டில் 2 கிராண்ட் ஸ்லாம்பட்டங்களையும் வேறு பல பட்டங்களையும் வென்று உலகின் முதல் நிலை இரட்டையர்ஜோடி என்ற சிறப்பைப் பெற்றனர்.

ஆனால், அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இருவரும் பிரிந்து தனித்தனியாக வேறு நபர்களுடன் ஜோடி சேர்ந்து விளையாடினர்.ஆனால், எதிலும் வெற்றி பெறவில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த இவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.கடந்த வாரம் நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தைவென்று மீண்டும் சாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் நடைபெற உள்ள ஏடிபி உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியில்உலகின் சிறந்த 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. பரிசுத் தொகையாக மொத்தம்ரூ.3.45 கோடி வழங்கப்படவுள்ளது.

இப் போட்டியை ஐ.டி.சி. நிறுவனம் ஏற்று நடத்த உள்ளது. இதையடுத்து இப் போட்டிகோல்ட் பிளேக் ஏடிபி உலக இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி என்றுஅழைக்கப்படும்.

இப் போட்டியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஸீதொலைக்காட்சி பெற்றுள்ளது.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...