For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியா 224 ரன்கள் - டெண்டுல்கர் 26-வது சதம்

By Staff
Google Oneindia Tamil News

ஷார்ஜா:

ஷார்ஜா கோப்பைக்கான இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. வாஸ் வீசிய முதல் பந்தைபவுண்டரிக்கு அடித்தார் கங்குலி. அதன் பிறகு கங்குலியும், டெண்டுல்கரும்நிதாதனமாக ஆடினர்.

ஒரு சில ஓவர்களுக்குப் பிறகு இருவரும் அடித்து ஆடத் தொடங்கினர். ஆனால்,அணியில் 33 ஆக இருந்தபோது கங்குலி அவுட்டானார். அவர் வாஸ் பந்தில் 17ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார்.

அவுட்டானதற்கு முதல் பந்தையும் கங்குலி கேட்ச் கொடுத்தார். அது நோ-பால் என்றுஅறிவிக்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அடுத்த பந்திலேயே அவர் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த திராவிட் தனக்கே உரிய நிதானத்துடன் விளையாடினார். ஆனால் அவர்16 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். அவரை ரன் அவுட்டாக்கியதுஇலங்கைகேப்டன் ஜெயசூர்யா.

பந்தை அடித்துவிட்டு எதிர் முனைக்கு ஓடிய திராவிட் எதிர்முனை கிரீஸை பேட்டால்தேய்த்துக் கொண்டு ஓடாததால் அவுட்டாக நேர்ந்தது. அந்த வகையில் தான்அவுட்டாவோம் என்றும் அவர் கருதவில்லை. அப்போது அணியின் எண்ணிக்கை 64.

அடுத்த வந்த காம்ளியும், புதுப் புயல் யுவராஜ் சிங்கும் நின்று விளையாடாமல் வந்தவேகத்தில் அவுட்டானார்கள். 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்துதவித்தது.

இந் நிலையில் களம் புகுந்தார் ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும் ராபின் சிங். அவரும்டெண்டுல்கரும் நிதானமாக சிறுகச்சிறுக ரன்கள் சேர்த்தனர். அவரசப்படாமல்மேற்கொண்டு விக்கெட் விழாமல் இருவரும் பொறுமையாக விளையாடினர்.

இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 202 ஆகஇருந்தபோது ராபின் சிங் அவுட்டானார். முரளிதரன் வீசிய பந்தை தூக்கி அடிக்க அதைஅட்டபட்டு பிடித்து அவுட்டாக்கினார். ராபின் சிங் 35ரன்கள் எடுத்தார்.

இதற்கிடையே டெண்டுல்கர் நிதானமாக ஆடி சதமடித்தார். இது ஒருநாள் போட்டியில்அவர் அடித்த 26-வது சதமாகும். சதமடித்த பிறகு டெண்டுல்கர் அதிரடி ஆட்டம்ஆடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், 101 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரன் அவுட்டானார். திராவிட்டைப் போல்பந்தை அடித்துவிட்டு எதிர்முனைக்கு மெதுவாக ஓடினார். அதைப் பயன்படுத்திகுணவர்த்தனே சரியாக விக்கெட் மீது பந்தை வீசி அவரை அவுட்டாக்கினார்.

அடுத்து வந்தவர்கள் யாரும் குறிப்பிடும்படியாக விளையாடவில்லை. இறுதியில்இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் வாஸ், முரளிதரன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இந்திய அணியில் 4 பேர் ரன் அவுட்டானார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X