For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய கிரிக்கெட்டுக்குக் கிடைத்த இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்"பாஸ்ட் பெளலர் ஸாகிர் கான்.

மும்பையைச் சேர்ந்த இவர் நைரோபியில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கிரிக்கெட்போட்டித் தொடருக்கான இந்திய அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டார்.

அங்கு பிரசாத்துடன் சேர்ந்து பந்துவீசி, பேட்ஸ்மென்களை அச்சுறுத்தினார். இப்போதுஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஷார்ஜா கோப்பைக்கான போட்டித் தொடரில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்ல அந்த ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராகவும்அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் புதிதாகக் சேர்க்கப்பட்டவர்களில் யுவராஜ் சிங் ஏற்கெனவே தனதுசிறப்பான ஆட்டத்தினால் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இப்போதுஸாகிர் கானும் அந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.

22 வயதான ஸாகிர் கான், அவ்வளவு எளிதாக சர்வதேச கிரிக்கெட் உலகில்நுழைந்துவிடவில்லை. தொடக்க காலத்தில் அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த அவர், திறமையிருந்தும் ரஞ்சிக் கோப்பைக்கான மும்பைஅணியில்கூட இடம் பெற முடியவில்லை. கார்சன் காவ்ரிக்குப் பிறகுமும்பையிலிருந்து இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இடம் பெறஅனைத்து தகுதிகளும், திறமையும் ஸாகிர் கானுக்கு இருந்தது.

ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பையில் இளம் வயதில் ஸாகிர் கானின்பந்துவீச்சைப் பார்த்து கவாஸ்கர், பாய்காட், ரிச்சி பெனாடு போன்றவர்கள் பாராட்டுத்தெரிவித்தனர். ஆனாலும் அந்த பாராட்டு எந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை.

அதன்பிறகு முன்னாள் இந்திய வீரர் சுதிர் நாயக்தான், ஸாகிர் கானின் திறமையைப்பார்த்து அவருக்கு உதவ முன் வந்தார். முதல்தர வேகப்பந்து வீச்சாளராக ஆக்கிக்காட்டுகிறேன் என்று கூறி ஸாகிர் கானுக்கு சிறப்பான பயிற்சி அளித்தார்.

தனது தேசிய கிரிக்கெட் கிளப்பில் ஸாகிர் கானைக் சேர்த்துக் கொண்டார். பின்னர்மும்பையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் இடம் வாங்கித் தந்தார்.

பின்னர் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக சென்னையில் உள்ளஎம்.ஆர்.எப். பவுன்டேனில் பயிற்சி பெறும்படி ஸாகிர் கானுக்கு சுதிர் நாயக்யோசனை கூறினார்.

அதன்படி 3 ஆண்டுகள் அங்கு ஸாகிர் கான் பயிற்சி பெற்றார். அங்குதான்ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, முன்னாள் இந்திய வீரரும், தேர்வுக் குழுஉறுப்பினருமான டி.ஏ. சேகர் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சென்னையில் பயிற்சி பெற்றாலும், ஸாகிர் கானின் திறமை மீது இருந்த நம்பிக்கையால்அவருக்கு தொடர்ந்து ஆலோசனை கூறி வந்தார் சுதிர் நாயக். பரோடா அணிக்காகவிளையாடும்படி ஸாகிர் கானிடம் அவர் கூறினார்.

சுதிர் நாயக்கைப்போலவே ஸாகிர் கானின் திறமை மீது நம்பிக்கை வைத்தவர் சஞ்சய்மஞ்ரேக்கர். மும்பை அணியின் கேப்டனாக இருந்தபோது ஸாகிர் கானை அணியில்சேர்க்க மஞ்ரேக்கர் முயன்றார். ஆனால் முடியவில்லை.

1998-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மஞ்ரேக்கர் ஓய்வுபெற்றதை அடுத்துமும்பை அணியில் இடம் பெறும் வாய்ப்பும் ஸாகிர் கானுக்குப் பறிபோனது.

எம்.ஆர்.எப். பவுண்டேஷனில் பயிற்சி பெற்றபோது ஆஸ்திரேலிய கிரிக்கெட்அகாதெமியில் பயிற்சி பெறும்படி டென்னிஸ் லில்லி யோசனை கூறினார். அதன்படிஆஸ்திரேலியாவுக்குச் சென்று பயிற்சி பெற்றார்.

பயிற்சி பெற்றபோதே நியூசிலாந்துக்குச் சென்ற அகாதெமியின் அணியில் ஸாகிர்கானும் இடம் பெற்றார். அங்கு சில பயிற்சி ஆட்டங்ளில் ஸாகிர் கான்விளையாடினார்.

அங்குதான் விளையாட்டு மைதானங்களின் தன்மைக்கு ஏற்ப எப்படி பந்துவீசுவதுஎன்பது போன்ற முக்கிய பாடங்களை ஸாகிர் கான் பயின்றார்.

இந் நிலையில், பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டது.முதல்கட்டப் பயிற்சிக்குத் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வீரர்களில்ஒருவராகத் தேர்வானார் ஸாகிர் கான்.

அதன்பிறகுதான் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.பரோடா அணியில் விளையாடிய அவர் கடந்த சீசனில் 42 விக்கெட்டுகளைவீழ்த்தினார். இதில் துலீப் டிராபி போட்டிகளும் அடங்கும்.

கடந்த கிரிக்கெட் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9-வதுஇடத்தைப் பிடித்தார் ஸாகிர் கான். இதில் 7 பேர் சுழற்பந்து வீச்சாளர்கள். அப்படிப்பார்த்தால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இடம் ஸாகிர்கானுக்குக் கிடைத்தது.

முதல் இடத்தை உத்தரப் பிரதேசத்தின் ஆஷிஷ் வின்ஸ்டன் ஸெய்டி பிடித்தார். அவர்மொத்தம் 48 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு ரஞ்சி டிராபி போட்டிகளில்ஸாகிர் கான் விளையாடினார்.

அவர் மொத்தம் விளையாடிய 8 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒருஇன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 3 முறையும், ஒரு மேட்ச்சில் 10 விக்கெட்டுகளை ஒருமுறையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

இந்த வளர்ச்சியின் மற்றொரு படியாக துலீப் மற்றும் தியோதர் டிராபி போட்டிகளில்மேற்கு மண்டல அணிக்காக ஸாகிர் கான் விளையாடினார்.

ஸாகிர் கானின் இத்தகைய சிறப்பான ஆட்டத்தினால், ஆசியக் கோப்பைக்கானபயிற்சிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் புனேயில் நடந்த பயிற்சிமுகாமுக்குப் பிறகு இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

ஆனால், திறமைக்கு என்றாவது ஒருநாள் மதிப்பு கிடைக்கும் என்பதற்குஅத்தாட்சியாக நைரோபி கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் 14 வீரர்களில்ஒருவராக ஸாகிர் கானும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் இந்திய அணியில் இடம் பெறவேண்டும் என்ற அவரது கனவு நனவானது.இப்போது ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகர் விருதையும் வென்றுசாதனை படைத்துள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X