For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாடா மகிழ்ச்சி .. கபில்தேவ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

என் மீது கூறப்பட்ட மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று சிபிஐவிசாரணை அறிக்கையில் கூறியிருப்பது இத்தனை நாள் நான் அனுபவித்து வந்த நரகவேதனைக்கு முடிவு கட்டிவிட்டது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கபில்தேவ் தெரிவித்தார்.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்த சிபிஐ, தனது விசாரணைஅறிக்கையை மத்தியஅரசிடம் சில நாட்களுக்கு முன் சமர்ப்பித்ததது. இந்தஅறிக்கையை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

இதில் கபில்தேவ் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் கபில்தேவ் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டுகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர்கூறினார்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் திறமைக்குக் குறைவாக விளையாடினால் ரூ. 25லட்சம் லஞ்சம் தருவதாக கபில்தேவ் தன்னிடம் கூறியதாக பிரபாகர் கூறினார். ஆனால்,இக் குற்றச்சாட்டை கபில் தேவ் மறுத்தார். பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர்பதவியையும் ராஜினாமா செய்தார்.

இது தவிர வேறு சிலர் மீதும் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.இதையடுத்து அக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும்படி சிபிஐக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது.

கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தி தனது விசாரணை அறிக்கையை மத்தியஅரசிடம் சிபிஐ சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், கபில்தேவ் மீது கூறப்பட்டகுற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன்அவர் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரமும் இல்லை என்று சிபிஐதெரிவித்துள்ளது.

இந் நிலையில், சிபிஐயால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கபில்தேவ்நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக நானும், எனது குடும்பத்தினரும்அனுபவித்து வந்த நரக வேதனைக்கு முடிவு வந்துவிட்டது. இப்போது நான்மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இதற்குப் பிறகு கிரிக்கெட் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இப்போதுநான் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், கடந்த காலத்தில் நான் மிகவும்மனவேதனைப்பட்டேன்.

என் மீது கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கையில் எடுத்துக் கொண்டு பலரும்பலவிதமாகப் பேசினர். பத்திரிக்கைகள் எல்லாம் முதல் பக்கத்தில் செய்திவெளியிட்டன. ஆனால், இப்போது நான் சுத்தமானவன், குற்றமற்றவன் என்றுநிரூபிக்கப்பட்டுள்ளேன்.

இப்போது, பத்திரிக்கைகளும் அந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிடுகின்றன.ஆனால், மனவேதனையால் நான் இழந்த கடந்த கால நாட்களை பத்திரிக்கைகள்எனக்கு மீட்டுத் தருமா? சிபிஐ அறிக்கை வெளியான பிறகு எனது தாயார் மிகவும்மகிழ்ச்சியாக இருக்கிறார். அதைப் பார்த்து நானும் சந்தோஷப்படுகிறேன்.

இனிமேல் கிரிக்கெட்டைப் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. கடைசியாக நான்பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் முத்தையாவுக்கு அனுப்பிய கடிதம்தான் இறுதியானது.

20 ஆண்டுகளாக கிரிக்கெட்டுக்கு நான் ஆற்றிய சேவைக்குக் கிடைத்த பரிசு இதுதான்எனும்போது அந்த கிரிக்கெட்டைப் பற்றி பேச எதுவும் இல்லை என்றார் கபில்தேவ்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X