For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கிரிக்கெட் சூதாட்டத்திற்குக் காரணமே அசாருதீன்தான்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐயின் விசாரணை அறிக்கைபுதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பல கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள், இந்தியகிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக கடந்த 6 மாதமாக சிபிஐ தீவிர விசாரணைமேற்கொண்டது. விசாரணை முடிந்து தனது அறிக்கையை சில தினங்களுக்கு முன்மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாவிடம் ஒப்படைத்தது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் அந்த அறிக்கையை வெளியிடலாம்என்று பிரதமர் வாஜ்பாயுடன் நடந்த பேச்சின்போது முடிவு காணப்பட்டு சிபிஐவிசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் பல அதிர்ச்சியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேட்ச் பிக்ஸிங்கில்மிகவும் பிரபலமாக இருந்தது டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டக்காரர் ரத்தன்மேத்தாதான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் அனைவருடன் அவர் நெருங்கிய தொடர்புவைத்துக் கொண்டிருந்தார். அது தவிர இந்திய வீரர்கள் சிலருடன் அவர் தொடர்புவைத்துக் கொண்டிருந்தார் என்று சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர் ஆகியோருடன்அவர் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போதுஅவர்களுக்கு சிறு சிறு அன்பளிப்புகளைக் கொடுத்து அப்போது நடைபெறும்ஆட்டத்தைப் பற்றிய கருத்துக்களைக் கேட்டறிவார்.

அதன்பிறகு, கிரிக்கெட் சூதாட்டத்தில் அவர் ஈடுபட்டு நிறைய பணம் சம்பாதித்தார்என்று சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் தவிர வேறுவெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ தனதுஅறிக்கையில் கூறியுள்ளது.

இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டீவர்ட், ஆஸ்திரேலிய வீரர்கள் மார்க் வாவ், டீன்ஜோன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா, இலங்கை வீரர்கள்அர்ஜுன ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குரோவ்,பாகிஸ்தான் வீரர் சலீம் மாலிக், தென் ஆப்பிரிக்க வீரர் ஹான்சி குரோனியேஆகியோரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சிபிஐ கூறியுள்ளது.

ரத்தன் மேத்தாவிடம் நடத்திய தீவிர விசாரணையில்தான் மேற்கண்ட வெளிநாட்டுவீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது என்று தனது 162 பக்கவிசாரணை அறிக்கையில் சிபிஐ கூறியுள்ளது.

இந்தியாவுடன் மற்ற நாடுகள் விளையாடும் போட்டிகள் தவிர வெளிநாட்டுஅணிகளுக்கு இடையேயான ஆட்டங்களையும் ரத்தன் மேத்தா மேட்ச் பிக்ஸிங்செய்துள்ளார். 1997-ம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தான் அணி சுற்றுப் பயணம்செய்தபோது ஒரு ஆட்டத்தை அவர் மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக ரத்தன் மேத்தாவுடன் நட்பு ரீதியில் அஜய் ஜடேஜா தொடர்புவைத்துக் கொண்டிருந்தார். ரத்தன் மேத்தாவின் ரெஸ்டாரண்டுக்கு அடிக்கடி சென்றுவருவார் அஜய் ஜடேஜா.

ஆனால், அசாருதீனிடம் மேட்ச் பிக்ஸிங் எதுவும் செய்து கொள்ளவில்லை என்றும்,ஆனால், ஜடேஜாவிடம் சில ஆட்டங்களின் முடிவுகளை கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் விசாரணையில் ரத்தன் மேத்தா தெரிவித்துள்ளார்.

6 மாதம் நடந்த தீவிர விசாரணையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்ஆசிப் இக்பால்தான் உலகளாவிய அளவில் மேட்ச் பிக்ஸிங் மற்றும் பெட்டிங்செய்வதில் பெரிய நபர் என்று தெரியவந்தது. உலகில் எந்த மேட்ச் நடந்தாலும் அதுபற்றி தகவல்களை கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்குத் தெரிவிப்பதில் பெரிய நபர்ஆசிப் இக்பால்.

பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள், பிட்சுகளின் நிலை, வானிலை, ஆட்டத்தின்முடிவு பற்றி முன்கூட்டியே ஆசிப் இக்பால் தெரிவிப்பார் என்று மும்பையைச் சேர்ந்தகிரிக்கெட் சூதாட்டக்காரர் அனில் நகாதாவிடம் நடத்திய விசாரணையில்தெரியவந்தது.

அவர் தெரிவித்த தகவல்களுக்காக ஆசிப் இக்பாலின் குடும்பத்துக்கு தங்க நகைகள்வழங்கியதாக அனில் கூறியுள்ளார். இந்த அனில் குப்தாதான் முகேஷ் குப்தா என்றமிகப் பெரிய கிரிக்கெட் சூதாட்டக்காரரை ஆசிப் இக்பாலுக்கு 1996-ம் ஆண்டுஅறிமுகப்படுத்தியுள்ளார்.

இப்படி பல அதிர்ச்சியான தகவல்களை சிபிஐ தனது விசாரணை அறிக்கையில்கூறியுள்ளது.

மேட்ச் பிக்ஸிங் குறித்து சரியான தக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்பட்சத்தில் கிரிக்கெட் விளையாட்டு மீதான ஊழல் களங்கத்தைப் போக்கமுடியும் என்றுசிபிஐ தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

சிபிஐ.யிடம் சிக்கிய "புக்கீஸ்:

முகேஷ் குமார் (டெல்லி), அனில் (மும்பை), ஆனந்த் சக்ஸேனாஸ் (டெல்லி), ஷோபன்மேத்தா (மும்பை), உத்தம் சந்த் (சென்னை), நவீன் சக்தேவா (டெல்லி), தீபக் ராஜோரி(டெல்லி), அஜய் குப்தா (டெல்லி), அமீஷ் குப்தா (டெல்லி), நிஷித் கோயல் (டெல்லி),ரத்தன் மேத்தா (டெல்லி), சஞ்சீவ் கோலி (டெல்லி), பாவன் பூரி (டெல்லி), சஞ்சய்ஆனந்த் (டெல்லி), ராஜேஷ் கால்ரா (டெல்லி).

தனது விசாரணை அறிக்கைக்கு ஆதரமாக கிரிக்கெட் வீரர்களிடம் நடத்தியவிசாரணையின் சில முக்கிய குறிப்புகளை அது அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

யார், யார்?

அஜய் சர்மா: இவருக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் எம்.கே. குப்தாவுக்கும்,அஜய் குப்தாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவர்தான் இந்திய கிரிக்கெட்வீரர்களை கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

மனோஜ் பிரபாகர்: இந்தியாவில் முதன் முதலாக மேட்ச் பிக்ஸிங் பற்றியகுற்றச்சாட்டைக் கூறியவர். கிரிக்கெட் விளையாடியபோதும், விளையாட்டிலிருந்துஓய்வு பெற்ற பிறகும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புவைத்துக் கொண்டிருந்தார்.

கிரிக்கெட் ஆட்டங்கள் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவித்து அதற்கு கிரிக்கெட்சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளார். இவரே தனிப்பட்ட முறையிலும்மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளார்.

இவர்தான் அரவிந்த டி சில்வா, சலீம் மாலிக், டீன் ஜோன்ஸ், பிரையன் லாரா, அர்ஜுனரணதுங்கா, அலெக் ஸ்டீவர்ட், மார்க் வாவ், கஸ் லோகி ஆகிய வெளிநாட்டு கிரிக்கெட்வீரர்களை கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தாவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அசாருதீன்: இந்திய கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் என்ற ஊழல் நுழையவும்,கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே தொடர்புவலுவடையவும் முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு அதிக அளவு பணத்தை லஞ்சமாகப் பெற்றவர் இவர்.மும்பையில் உள்ள சில சமூக விரோத சக்திகளுடன் தொடர்பு கொண்டு மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளார்.

அஜய் ஜடேஜா: பல கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புவைத்துக் கொண்டிருந்தார். ஒரு ஆட்டத்தின் முடிவு, ஆட்டம் குறித்த தகவல்கள்போன்றவற்றை கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்குத் தெரிவித்து மேட்ச் பிக்ஸிங்செய்துள்ளார்.

நயன் மோங்கியா, நிகில் சோப்ரா, பிசியோதெரபிஸ்ட் அலி இராணி ஆகியோரும்மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று சிபிஐ தனதுஅறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால், நவ்ஜோத் சிங் சித்து மீது கூறப்பட்டுள்ளமேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அவர் மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்பதை முழுவதுமாக ஒதுக்கி விடமுடியாது என்றும்சிபிஐ கூறியுள்ளது.

கபில்தேவ் மீதான புகாருக்கு ஆதாரமில்லை:

கபில் தேவ் மீது கூறப்பட்ட மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து விரிவாகவும்,முழுமையாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், மேட்ச் பிக்ஸிங்குக்கும் கபில்தேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுவிசாரணையில் அறியப்பட்டது. அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அவருக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பு இருந்ததற்கானஎந்தவிதமான ஆதாதரமும் சிக்கவில்லை என்று சிபிஐ தனது அறிக்கையில்கூறியுள்ளது.

ஜோன்ஸ், குரோவ் மறுப்பு:

இதற்கிடையே, மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கையில் தங்களதுபெயர்கள் இடம் பெற்றுள்ளதற்கு ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸும், நியூசிலாந்துவீரர் மார்ட்டின் குரோவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் எந்த விதமான மேட்ச் பிக்ஸிங்கிலும் ஈடுபடவில்லை என்று அவர்கள்கூறியுள்ளனர்.

சிபிஐ அறிக்கையில் மேற்கண்ட இரு வீரர்கள் உள்பட மொத்தம் 9 வெளிநாட்டுவீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம்கேட்டோ அல்லது பணம் வாங்கியோ உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இருவரும் அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். ஒருபோதும் மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X