For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசாருதீன் ஒழுங்காக ஆடவில்லை .. சிபிஐயிடம் டெண்டுல்கர் வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அசாருதீன் தனது முழுத் திறமையுடன் விளையாடவில்லை என்று சிபிஐயிடம் சச்சின்டெண்டுல்கர் கூறியுள்ளார்.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ தனது விசாரணைஅறிக்கையை சில நாட்களுக்கு முன் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கைபுதன்கிழமை வெளியிடப்பட்டது.

விசாரணையின்போது பல இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் சிபிஐதீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது அவர்கள் தெரிவித்த தகவல்களை தனதுஅறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

அதன்படி, அசாருதீன் தனது முழுத் திறமையையும் காட்டி விளையாடவில்லை என்றுவிசாரணையின்போது சச்சின் டெண்டுல்கர் கூறியதாக தனது அறிக்கையில் சிபிஐகூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நான் இருந்தபோது அணியில் அசாருதீனும்இருந்தார். ஆனால், அவர் தனது முழுத் திறமையையும் காட்டி விளையாடவில்லை.அவருக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதினேன்.

மேலும், மேட்ச் பிக்ஸிங்கிலும் ஈடுபட்டுள்ளாரோ என்றும் அசாருதீன் மீது நான்சந்தேகப்பட்டேன். 1994-ம் ஆண்டு இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிசுற்றுப்பயணம் செய்தது.

கான்பூரில் நடந்த ஆட்டத்தில் மனோஜ் பிரபாகரும், நயன் மோங்கியாவும் மெதுவாகவிளையாடினர். அந்த சுற்றுப் பயணத்தில் நான் இந்திய அணியின் துணை கேப்டனாகஇருந்தேன்.

ஆகவே, மெதுவாக விளையாடும்படி அணி நிர்வாகத்திடமிருந்து பிரபாகருக்கும்,மோங்கியாவுக்கும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போதுஅவர்கள் ஏன் மெதுவாக விளையாடினர் என்று தெரியவில்லை.

பிரபாகர் மற்றும் மோங்கியாவின் இச் செயலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.இருந்தபோதும் அந்த ஆட்டம் முடிந்த பிறகு அது பற்றி அவர்களிடம் நான்பேசவில்லை.

ஆனால், சிறிது நேரத்தில் என்னிடம் பிரபாகர் பேசினார். அப்போது விக்கெட்டைஇழக்காமல் மெதுவாக விளையாடும்படி அணி நிர்வாகத்திடமிருந்து தகவல் வந்ததாகமோங்கியா தன்னிடம் கூறியதாக பிரபாகர் தெரிவித்தார்.

ஆனால், அத்தகைய தகவலைத் தெரிவித்தது யார் என்பது பற்றிமோங்கியாவிடமிருந்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக கபில் தேவுக்கு எதிராக எந்த சம்பவத்தையும் என்னால்கூற முடியாது. 1999-ம் ஆண்டு அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில்அந்த அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுக்கப்படாததற்கு கபில்தேவ் காரணமில்லை.

அது அணி நிர்வாகத்தின் முடிவே தவிர, எந்த ஒரு தனி நபரின் முடிவும் அல்ல. அனில்கும்ளே, அஜய் ஜடேஜா, ஸ்ரீநாத் ஆகியோர் நாங்கள் சோர்ந்து போய்விட்டோம். பந்துவீச முடியாது என்று கூறினர்.

அதனால், நானும் அணியின் பயிற்சியாளர் கபில் தேவும் சேர்ந்தே ஃபாலோ-ஆன்கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தோம்.

ஃபாலோ-ஆன் கொடுக்கக் கூடாது என்று கபில்தேவ்தான் முடிவு எடுத்ததாகவும்,அதை நான் எதிர்த்ததாகவும் சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியாயின. மேலும் சிலபத்திரிக்கைகளில் மேட்ச் பிக்ஸிங் காரணமாகவே ஃபாலோ-ஆன்கொடுக்கப்படவில்லை என்றும் செய்தி வெளியாயின. இதில் எதுவும்உண்மையில்லை.

எனது திருமணத்துக்கு மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டக்காரர் ஷோபன்மேத்தா வந்திருந்தது குறித்து எனக்கும் அவருக்கும் முடிச்சு போட்டு செய்திகள்வெளியாகின. ஆனால், அந்த நபரை நான் அதற்கு முன் பார்த்ததும் இல்லை.திருமணத்துக்கு அழைக்கவும் இல்லை.

எனது திருமணத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சிலர் தான்திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அழைப்பிதழ் இல்லாதவர்கள் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை என்று விசாரணையின்போது டெண்டுல்கர் கூறியதாக சிபிஐஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X