For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஜி புரட்சிக்காரர்கள் பிடி தளர்கிறது .. 8 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சுவா:

பிஜியில் வியாழக்கிழமை திடீர் வன்முறையில் இறங்கிய புரட்சிக்காரர்கள் மீது ராணுவம் தொடர்ந்து கடுமையானநடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை நடந்த மோதல்களில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் சுவாவில் வியாழக்கிழமை காலை ராணுவ அதிகாரிகள் தங்கியிருக்கும் பகுதியில், ராணுவத்தின் சிறப்புஅதிரடிப்படையைச் சேர்ந்த சில வீரர்கள், திடீர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதில் 2 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதலில் இறங்கினர். அதிரடிப்படை வீரர்கள் வசம்பினைக் கைதிகளாக இருந்த 5 பேரை மீட்டனர்.

ராணுவம் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் மோதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் இறந்தனர். 28 பேர்காயமடைந்தனர்.

திடீர் வன்முறை காரணமாக சுவாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான பாதுகாப்பும்,அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுவா உள்பட பல இடங்களில் பொதுமக்கள்யாரும் வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோதல் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வர்த்தகநிறுவனங்கள் அனைத்தும் மூடியிருந்ததால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள்திறக்கப்படவில்லை.

கலவரம் நடந்த, குயின் எலிசபெத் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்,துப்பாக்கிச் சூடு ஏற்பட்டதும், பெரும்பாலான ராணுவ வீரர்கள் புகலிடம் தேடி பக்கத்திலிருந்த வீடுகளுக்குள்அடைக்கலம் புகுந்தனர் என்றனர்.

ராணுவ கமாண்டர் பிராங் பெய்னிமாராமாவையும் தாக்கத் திட்டமிட்டு அவர் தங்கியிருக்கும் இருப்பிடத்திலும்அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். ஆனால் அவர் தனது பாதுகாவலர்களுடன் அதிர்ஷ்டவசமாகத்தப்பித்து விட்டார்.

ராணுவத்தின் புரட்சி தடுப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த அதிரடிப்படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள்தான் கடந்த முறை ஜார்ஜ் ஸ்பைட் புரட்சி நடத்தியபோது அவரை ஆதரித்தவர்கள்.

கடந்த மே மாதம் 19-ம் தேதி இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர சவுத்திரியையும், அவரது அமைச்சரவையில்உள்ளவர்களையும் ஸ்பைட் தலைமையிலான புரட்சிக் குழு, புரட்சி மூலம் சிறை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X