For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: எதிர்வரும் தேர்தலிலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். ஆக, இந்த இரண்டுகழகங்களின் பிடியிலிருந்து தமிழகம் தப்ப வழியே இல்லையா?

ப: கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு வழியையும் காணோம்.

கே: விடுதலைப்புலி ஆதரவாளர்கள் 100 பேர், வீரப்பன் இருக்கும் காட்டுக்குள் புகுந்து விட்டதாகஎஸ்.ஆர். பாலசுப்ரமணியம் கூறியுள்ளாரே?

ப: தமிழக அரசின் சாதனையை இவர் விளம்பரப்படுத்தி மகிழ்வது ஏன் என்று புரியவில்லை.

கே: தமிழ் நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சி எப்படி உள்ளது?

ப: பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து, பாராளுமன்றத் தேர்தலில், நமது கூட்டணிக்கு வாக்களித்தபா.ஜ.க. ஓட்டர்கள், இப்போது, சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பார்களா?என்று சிந்தித்துப் பார்க்கும் அளவுக்கு உள்ளது.

கே: ஓய்வு பெறும் நேரத்தில் இப்படி ஓர் இடி விழும் என்ற நரசிம்ம ராவ் நினைத்திரருப்பாரா?

ப: அவர் என்ன நினைத்தாரோ தெரியாது. தனது ஆட்சி காலத்தில் பல சாதனைகளையும் புரிந்தவர் அவர்.முக்கியமாக பொருளாதார தாராளமயத்தை மும்முரமாகத் தொடங்கி வைத்ததே அவர் ஆட்சிதான்.

மெத்தப் படித்தவரும் கூட, ஓர் அறிவாளி. படாடோபம் இல்லாதவர். அவருக்கு இப்படி ஒரு கதி நேர்ந்திருப்பது.வருந்தத்தக்க விஷயம்தான். அதுவும், பணம் பெற்றவர்கள் மீது வழக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம்கூறிவிட்ட நிலையில் - இந்த தண்டனை கடுமையானதாகத்தான் தெரிகிறது. ஆனால், சிக்கியவர்கள்தணடிக்கப்படாவிட்டால், தவறுகள் மலிந்து விடுமே!

கே: ஜெயில் எனக்குக் கோவிலுக்குச் சமம் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளது பற்றி ... ?

ப: நாஸ்திகராக இருப்பாரோ?

கே: நடிகர் ராஜ்குமாரை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டதற்குச் சில செய்தியாளர்களும், தவறானசெய்திகளை வெளியிடும் சில பத்திரிக்கைகளும்தான் காரணம் என்கிறாரே முதல்வர் கருணாநிதி?

ப: சுப்ரீம் கோர்ட் கைதிகள் விடுதலைக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதுதான் காரணம் - என்று நக்கீரன் கோபால்சொல்வது பொய் என்பது இப்போதுதான் தெரிகிறது. முதல்வர் கோபாலின் கால்களை இப்படி வாரி விடக்கூடாதுதான்.

கே: அ.தி.மு.க.வுடன், பா.ம.க. கூட்டு சேர்ந்தால், காங்கிரஸ் மற்றும் த.மா.கா.வின் நிலை என்ன?

ப: திண்டாட்டம்தான். எப்படி சமாளிக்கிறார்கள் என்பது ஜெயலலிதாவின் அணுகு முறையைப் பொறுத்தது.

கே: நாட்டில் பாதிப் பேருக்கு மட்டும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கி விட்டு, வாக்காளர்அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வரும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் கமிஷன்கட்டாயப் படுத்தினால் யாருக்கு லாபம்?

ப: அப்படி தேர்தல் கமிஷன் செய்தால், அது தவறாக இருக்கும் என்பது ஒரு புறமிருக்க, இந்த அடையாள அட்டைவிவகாரத்தில் இப்போது வேறு ஓர் ஆபத்து இருக்கிறது.

இடம் மாறிய குடும்பத்தினர், வெளியூர் சென்று விட்ட குடும்பத்தினர், இறந்து போனவர்கள் - என்று பட்டியல்கள்தயாரித்து, அவர்கள் பெயரில் அடையாள அட்டைகளை ஆளும் கட்சியினர் பெற்று வருகின்றனர் - என்றகுற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

அதாவது கள்ள ஓட்டு போடுவதற்கு இப்போதே கள்ள அட்டைகள் தயாராகின்றன. இது தேர்தல் கமிஷனின்கவனத்திற்குரியது.

கே: தமிழகத்தில் ஆட்சி நாட்டில் நடக்கிறதா அல்லது காட்டில் நடக்கிறதா என்று தெரியவில்லை என்றுகி.வீரமணி கூறியுள்ளாரே?

ப: தமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறது. காட்டில் வேறு ஓர் ஆட்சி நடக்கிறது. அது தனி மாநிலம். உத்தராஞ்சல்,வனாஞ்சல் மாதிரி வீரப்பாஞ்சல். இப்படி சொல்வதுகூட தவறு. வீரப்பாஞ்சல், தனி நாடு. அதனால்தான் அதற்காகதூதர் கூட நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கே: தமிழக அரசின் சாதனையை. கருணாநிதி பட்டியலிட்டால்தான் எல்லோரும் கிண்டல்செயக்கிறார்களே! எங்கே நீங்கள் தமிழக அரசின் சார்பில், தமிழக அரசின் சாதனைகளைபட்டியலிடுங்கள்?

ப: உடனே நினைவுக்கு வருகிற சாதனைகளைச் சொல்கிறேன். எண்ணிக் கொள்ளுங்கள். முதலாவது முறை தூதரைகாட்டுக்கு அனுப்பியது ; இரண்டாவது முறை தூதரை காட்டுக்கு அனுப்பியுது ; மூன்றாவது முறை தூதரைகாட்டுக்கு அனுப்பியது ; நான்காவது முறை தூதரை காட்டுக்கு அனுப்பியது ; ஐந்தாவது முறை தூதரை காட்டுக்குஅனுப்பியது ...

கே: வீரமணியை ஆதரிக்கும் ஜெயலலிதா, நெடுமாறனை எதிர்ப்பது ஏன் என்கிறாரே கருணாநிதி?

ப: தனது ஆட்சி காலத்தில், அரசின் சார்பில் செயல்பட, வீரமணியை ஜெயலலிதா அதிகார பூர்வமாகநியமித்திருந்தால், இந்தக் கேள்வியில் முழு நியாயம் இருந்திருக்கும். இப்போது பிரச்சார நியாயம் மட்டுமேஇருக்கிறது.

கே: ஊழல் விழுந்த தி.மு.க., அ.தி.மு.க. வைத் தவிர, வேறு எந்தக் கட்சியையும் ஆதரிக்க தங்களுக்குத்தெரியாதா?

ப: ஒன்று செய்யட்டுமா? துணிந்து யாதவ் கட்சியை ஆதரித்து விடட்டுமா? நல்ல மாற்றமாக இருக்கும்.

கே: 1996-ல் தி.மு.க. பெற்ற வெற்றி, இரவல் வெற்றி என்கிறாரே ஜெயலலிதா?

ப: ஆனால் அவர் பெற்ற தோல்வி, சொந்தத் தோல்வி ஆயிற்றே! அதுதானே பிரச்சனை.

கே: வர, வர பத்திரிக்கைக்காரர்களை கருணாநிதி அதிகம் கண்டித்து வருகிறாரே? எதனால்?

ப: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாகச் சொல்கிற முதல்வர், பத்திரிக்கைகளின் எழுத்தில்முரசொலியைக் காண விரும்புகிறார். அது ஏமாற்றமாக முடியும் போது கோபம் வருகிறது கண்டிக்கிறார்.

கே: இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதால், அணியின் ஆட்டத் தரம்உயருமா?

ப: சர்வதேச கிரிக்கெட்டில் பங்கு பெறுகிற அளவுக்கு வளர்ந்துவிடட ஓர் ஆட்டக்காரருக்கு, கோச் என்னசெய்துவிட முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.

காலை மடக்கு, கையை நீட்டு, முதுகை வளை - என்று ட்ரில் வாங்கலாம். அதற்கும் ஆள் இருக்கிறது. வளர்ந்துவிட்ட ஆட்டக்காரரின் ஆட்டத்தைச் சீர் செய்ய முனைந்தால் - இருப்பதும் போய், இல்லாததும் வராமல், இரண்டும்கெட்டானாகப் போகவும் வாய்ப்பு உண்டு. இந்த கோச் சமாச்சாரம் ஃபீல்டிங்கில் உதவலாம் : ஏனென்றால் அதுவெறும் பயிற்சியையும், முனைப்பையும் மட்டுமே பொறுத்த விஷயம். மற்றபடி என்ன உதவுமோ, தெரியவில்லை.

கே: கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தேச விரோத சக்திகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியிருப்பது நியாயம் தானே?

ப: தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இந்த ஆட்சி நம்மைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடும் என்ற நம்பிக்கைபிரிவினை சக்திகளுக்கு ஏற்படுகிறது என்பது உண்மைதான்.

கே: முன்பெல்லாம் ஜெயலலிதா, நான் சொல்வதைத்தான் கேட்பார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் கூறியிருப்பது பற்றி ... ?

ப: ஓஹோ! கோளாறு இங்கே இருக்கிறதா? சரிதான்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X