For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாத அமைப்புக்கு எதிராக மத மாநாடு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தீன்தார் சன்னபசவேஸ்வரா அஞ்சுமான் அமைப்பு தேச விரோத செயல்களில்ஈடுபடுவதை மக்களுக்கு தெரியப்படுத்த அனைத்து மத மாநாடு பெங்களூரில்நடக்கிறது. சிவாஜி நகரில் ஜமீயத்-இ-உலாமா இ-ஹிந்த் அமைப்பு இந்த மாநாட்டைசனிக்கிழமையன்று நடத்துகிறது.

இந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தியின் விவரம்:

தென்னிந்தியாவில் பல பகுதிகளில் சர்ச்களிலும், மசூதிகளிலும் வெடிகுண்டு வைத்தசம்பவத்தில் இனம் தெரியாத ஆட்சேபனைக்குரிய தீன்சார் சண்பசவேஸ்வராஅஞ்சுமான் அமைப்பினர்கு தொடர்பு உண்டு என புலனாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள்அனைவரும் தீன்சார் அமைப்பைச் சேரந்தவர்கள். பத்திரிக்கைகளில் வெளியானபுகைப்படங்கள் மூலமாக அவர்களை முஸ்லீம்கள் என இந்திய சகோசதரர்களும்,முஸ்லீம்களில் ஒரு பிரிவினரும் துரதிர்ஷ்டவசமாக நினைத்து வருகிறார்கள். அதுதவறானது.

நிஜாம் மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் பல்லம்பேட் என்ற இடத்தில்பிறந்தவர் சித்திக் பசவேஸ்வரா. இவர் பல மதங்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.இவர் தன்னை ஹிடியாளி மதத்தில் இணைந்தார்.

இறைவனின் பிரதிநிதி என்று கூறிக் கொண்டிருந்த மிர்ஜா குலாம் அகமது என்பவரால்இந்த மதம் தொடங்கப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் கோட்பாடுகளுக்குஅப்பாற்பட்டது.

ஹடியாவின் மகனும், இரண்டாவது மத குருவுமான மிர்ஜ பஷீருதீன் தீன்சார்சன்னபசவேஸ்வரா அஞ்சுமான் என்ற அமைப்பை ஆசிப் நகரில் துவக்கினார். இதற்குஜதக்குரு ஆசிரமம் பெயரிட்டிருந்தார்.

யூசுப்பின் தூதர் எனவும், நபிகள் நாயகத்தின் அவதாரம் எனவும், மனித உருவில்நடமாடும் ஆண்டவன் எனவும் கூறிவந்தார். இவை அனைத்தும் இஸ்லாமிய மதத்தின்அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவை.

இந்துக்கள் மத்தியில் தான் அவதார புருஷன் என கூறிக்கொண்டு, லிங்காயத் பிரிவைதுவக்கி வைத்த பசவேஸ்வராவின் மருமகன் சன்ன பசவேஸ்வராவின் அவதாரம் தான்என கூறிவந்தார்.

இஸ்லாமிய, இந்து மக்கள் இவரை கடுமையாக எதிர்த்தால் பல முறை நிஜாம் அரசுஇவருக்கு சிறையில் தண்டனை அளித்தது. தேச துரோகம், இஸ்லாமியர்களுக்குஎதிரான நடவடிக்கைக்காக இந்த இயக்கத்தை நிஜாம் அரசு தடை செய்தது. இவரும்இவரது சீடர்களும் முஸ்லீம்கள் அல்ல எனவும் முஸ்லீம் உலாமா அறிவித்தது.

இச் சந்தர்பத்தில் தீன்த்ார் அமைப்பு தேச துரோக செயல்களில் ஈடுபட்டு வருவது மதக்கொள்கைக்கு எதிரானது. முஸ்லீம்களுக்கும் எதிரானது என்பதை தெரிவிக்கஜமியத்-இ-உலாமா-இ-கர்நாடகா அமைப்பு பெங்களூரில் அனைத்து மத மாநாடுக்குஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாடு சனிக்கிழமையன்று பெங்களூர் மில்லர்ஸ் ரோடிலுள்ள அம்பேத்கார்பவனில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இதற்கு ஹஜ்ரத் மவுலானா ஹபீக் குலாம் முகமது சித்திக் சையத் சாஹிப் தலைமைவகிக்கிறார். கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்கிறார்.

மேலும் பல மதத் தலைவர்களும், அரசியல் தவைர்களும் கலந்து கொள்கிறார்கள்எனஅந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X