For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் நேர்மையானவன் என்கிறார் அசார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் அசாருதீன் தான் நேர்மையானவர் எனவும் மேடச் ஃபிக்சிங்கில் ஈடுபடவில்லைஎனவும் கூறியிருக்கிறார்.

சி.பி.ஐ.யால் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அசாருதீன், அஜய் ஜடேஜா, நயான் மோங்கியா, அஜய்ஷர்மா, மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டப்பட்டனர்.

அவர்களை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்குனர் மாதவன்நியமிக்கப்பட்டார்.

அவரும் அசாருதீன் மாட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டார் எனவும், மோங்கியாவைத் தவிர மற்றவர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டஏஜென்டுகளுடன் தொடர்பு உண்டு எனவும், அதே போல் அரசு மருத்துவர் அலி ஈரானிக்கும் சூதாட்ட ஏஜென்டுகளுடன்தொடர்பு உண்டு என தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து செவ்வாய் கிழமையன்று கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை முன் அசாருதீன் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜரானார்கள்.

அசாருதீன் ஒழங்கு நடவடிக்கை குழுவினரிடம் கூறுகையில், தான் எந்த விதமான மேட்ச் ஃபிக்சிங்கிலும் ஈடுபடவில்லை எனவும்மாறாக நாட்டிற்கு நான் பெருமை தேடித் த்ந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் முத்தையா, துணை தலைவர் கமல்மோரகார், மற்றும் ராம்பிராசாத் ஆகியோர் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலி ஈரானி கூறியவற்றை கேட்டறிந்தார்கள்.

இவர்கள் அனைவரும் தங்கள் தரப்பைப் பற்றிய நியாயத்தை சொல்லி முடிக்க 6 மணி நேரம் ஆனது. மனோஜ் பிரபாகரும்,ஜடேஜாவும் மட்டும் நிருபர்களுடன் பேசினர். மற்ற எவரும் பேசவில்லை.

கூடியிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த முத்தையா கூறுகையில், அசார் சி.பி.ஐ.யிடம் மேட்ச் ஃபிக்சிங் பற்றி எதுவும்கூறவில்லை என்றார்.நான் நேர்மையான விளையாட்டு வீரன் நாட்டுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறேனே தவிர என்றும்நாட்டுக்கு துரோகம் செயத்தில்லை எனவும் தெரிவித்ததாக கூறினார்.

அதே போல மனோஜ் பிரபாகரும் மாதவனைக் குறை கூறியுள்ளார். தன்னைப் பற்றி மாதவன் தவறான தகவல் கொடுத்துள்ளதாகபிரபாகர் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X