நேபாளத்தில் மனிஷா படத்துக்குத் தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்டோர்:

ரித்திக் ரோஷன் நேபாள மக்களைப் பற்றித் தவறாகக் கூறியதைக் கண்டித்து, அங்குள்ள தேசிய மாணவர்கள் சங்கம் நேபாளத்தில் பிறந்த நடிகை மனிஷாகொய்ராலாவின் படத்தைத் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தலைநகர் காட்மாண்டுவில் மனிஷா கொய்ராலா நடித்த சாம்பியன் என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் படத்தைத் திரையிடக் கூடாது என்றுதிரையரங்கு முன்பு மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து படம் திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

சமீபத்தில் பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ரித்திக் க்ரோஷன் நேபாள மக்களைப் பிடிக்காது. நேபாள நாட்டு கலை கலாச்சாரத்திலும் எனக்கு நம்பிக்கைஇல்லை என்று கூறினார். இந்தப் பேச்சைக் கண்டித்து நேபாளத்தில் பெருங்கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸார்துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 4 மாணவர்கள் இறந்தனர். இதையடுத்து கடையடைப்பு, பந்த் ஆகியவை நடந்தன.

இதற்கிடையே ரித்திக் க்ரோஷனுக்கு ஆதரவாக நடிகை மனிஷா கொய்ராலா பேசினார். இதை எதிர்த்து நேபாள மாணவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர். மனிஷா கொய்ராலாவின் திரைப்படத்தை நேபாளத்தில் திரையிடக் கூடாது என்று போராட்டம் நடத்தினர்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற