For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசு தின விழா ... கோவையில் மெகா கவியரங்கம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் 111 கவிஞர்கள் பங்கேற்கும் "மெகா கவியரங்கத்திற்கு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்ஏற்பாடு செய்துள்ளது.

கோவையில் குடியரசு தின விழாவன்று மெகா கவியரங்கம் நடக்கிறது. இந்தக் கவியரங்கத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடுசெய்துள்ளது. இதில் 111 கவிஞர்கள் பங்கேற்கின்றனர். மணி மேல்நிலைப் பள்ளியில் உள்ள நானிக் கலையரங்கத்தில் தொடங்கும் இந்தக் கவியரங்கம்,காலை 11 மணிக்குத் துவங்குகிறது. இரவு 9 மணிக்கு முடிவடைகிறது.

இதில் கொங்கு மண்டலத்தில் வானம்பாடி கவிஞர்கள் அமைப்பு கவிஞர்களுக்குப் பாராட்டு விழாவும் நடத்துகிறது. அப்துல்ரஹ்மான், சிற்பிபாலசுப்ரமணியம், ஆனந்தன், நந்தலாலா, முத்துநலவன், புவியரசு, ஞானி, முல்லை, ஆதவன், கனல் மைந்தன், சுந்தரம், இளமுருகு, சி.ஆர் ரவீந்திரன்,நித்திலன் ஆகியோர் வானம்பாடி இயக்கத்தில் பாராட்டுப் பெறுகின்றனர். இவர்களும் தங்கள் கவிதைகளை இங்கு வாசிக்கின்றனர்.

இதுவரை இந்த விழாவில் வாசிப்பதற்காக 650 கவிதைகள் வந்து சேர்ந்தன. இவை 10 தலைப்புகளில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகளில் நூறுகவிதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு 10 கவிதைகளுடனும் ஒரு கவிதையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும். இறுதியாக 111 கவிதையை சிறப்புக்கவிதையாக ஒருவர் வாசிப்பார். அந்தக் கவிஞர் சிறப்புக் கவிஞர் என்ற பட்டத்தைப் பெற உள்ளார். இந்த இறுதிக் கவிதையைப் படிப்பவர்பார்வையாளர்களில் ஒருவராகக் கூட இருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X