For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைன் தமிழ் பல்கலைக்கழகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் முதல் தமிழ் ஆன்லைன் பல்கலைகழகத்தைசனிக்கிழமை துவக்கி வைத்தார்.

இந்த பல்கலைகழகம் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் 75 மில்லியன்தமிழர்களுக்கு தமிழின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் இலக்கியம் பற்றியதகவல்களை வழங்கும்.

பல்கலைகழகத்தை துவக்கிவைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசுகையில்,. தமிழ்ஆன்லைன் பல்கலைகழகம் தமிழ் மொழிக்கு நாங்கள் ஆற்றி வரும் தொண்டிற்குசான்று.

இந்த பல்கலைகழகம் மூலம் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், அயல் நாட்டில்வாழும் தமிழ் மொழி பேசுபவர்களுக்கும் இடையேயான உறவு பலப்படும் என்றார்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் பேசுகையில்,அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தமிழின் பண்பாடு, கலாச்சாரம் குறித்துதெரிவிக்கும் விதமாக இந்த ஆன்லைன் பல்கலைகழகம் அமைய வேண்டும்.

இந்த பல்கலைகழகம் சுற்றுலா பயணிகளுக்கும், அயல் நாடுகளில் இருந்து வரும் தமிழ்பேசும் மக்கள் நடப்பு தமிழை பயின்று கொள்ளும் வகையாக குறைந்த நாட்களில்நடப்பு தமிழை கற்றுக் கொள்ளும் விதமாக பாடத் திட்டம் ஒன்றை துவங்க வேண்டும்.இது தமிழ் மேலும் பரவ உதவும்.என்றார்.

இந்த பல்கலைகழகம் துவங்கப்பட்டதன் காரணம் குறித்து இந்த பல்கலைகழகஇயக்குனர் குழுவின் தலைவர் குழந்தைசாமி தெரிவிக்கையில், தமிழை பரப்புவதுமட்டுமே இந்த பல்கலைகழகத்தின் நோக்கம் அல்ல. அயல் நாடுகளில் வாழும்தமிழர்கள் தமிழ் பற்றியும், தமிழ் கலை, கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் பற்றியும்அறிய வழி வகுப்பதும் ஆகும் என்றார்.

துவக்க விழாவில் இந்த பல்கலைகழகம் பயிற்றுவிக்கும் பாடத்திட்டங்கள் பற்றியவிவரமும் அளிக்கப்பட்டது. இந்த பல்கலைகழகத்தின் இணையத் தளத்தின் முகவரி www.tamilvu.org ஆகும்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X