For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ் ஏசியா பசிபிக்: வெல்வாரா மகேஸ்வரி?

By Staff
Google Oneindia Tamil News

கோட்டா:(ராஜஸ்தான்)

Maheshwariஅழகிய உடைகள் மட்டுமே அழகு ராணிகளை உருவாக்கிவிடாது. அறிவுகூர்மையும்அவசியம் என இந்திய அழகி (மிஸ் இந்தியா- ஏசியா பசிபிக்) மகேஸ்வரிதியாகராஜன் கூறினார்.

மிஸ் இந்தியா ஆசியா பசிபிக் 2001ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் மகேஸ்வரிதியாகராஜன் (வயது 20). இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் பி.ஏ. ஆங்கிலஇலக்கியம் பட்டம் பெற்றவர். இவரது உயரம் 5 அடி 7 அங்குலம்.

இவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மிஸ் ஆசிய பசிபிக் போட்டியில்இந்தியா சார்பில் இவர் பங்கேற்விருக்கிறார்.

திங்கள்கிழமை ஃபேஷன் தொழில் நுட்ப மையத்தை துவக்கி வைப்பதறகாகராஜஸ்தான் மாநிலம், கோட்டாவிற்கு வந்திருந்தார் மகேஸ்வரி.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், உடைகள் மட்டுமே ஒருவரை அழகியாககாட்டிவிடாது. நமது அறிவும், மனதும் அழகை நிர்ணயிக்கும் அளவு கோல்களில்முக்கியமானது .

Maheshwariஇந்திய பெண்கள் சல்வார் -கமீசிலும்,புடவையிலும் அழகாக தெரிவார்கள்.அவரவர்களுக்கு எந்த உடை பொருத்தமாக இருக்குமோ அதை அவர்கள்தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பது தவறல்ல. அது ஒரு எல்லைக்குள் இருக்கவேண்டும். நான் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எனக்கு பலதிரைப்படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.

நான் தற்போது மாடலிங்கில் அதிக கவனம் செலுத்வதால் திரைப்படங்களில் நடிக்கவிரும்பவில்லை. மேலும் நான் விளம்பர நிறுவனம் ஒன்றை தொடங்கவும்திட்டமிட்டுள்ளேன்.

இது தவிர இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் மிஸ் ஆசியா பசிபிக்போட்டியிலும் நான் கலந்து கொள்ளவிருக்கிறேன். அதற்கான பயிற்சியிலும் நான்ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X