திமுக தொண்டர்கள் மீது தடியடி, பலருக்கு மண்டை உடைந்தது
சென்னை:
சென்னை மத்திய சிறைமுன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நள்ளிரவு 2.15 மணிக்கு கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஜூலை 7 ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் சென்னைமத்திய சிறை முன்பு குவிந்தனர்.
அவர்கள் போலீஸாரை எதிர்த்தும், அதிமுக அரசை எதிர்த்தும் கோஷம் போட்டனர்.
இதையடுத்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இந்தத் தடியடி சம்பவத்தில் திமுக எம்.பி.ஒருவரின் மண்டை உடைந்தது.
ஏராளமான திமுக தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்த ஒரு சில பஸ்கள் மீது திமுக தொண்டர்கள் கல்வீச்சில் இறங்கியதால் அங்கும் செல்லும் அரசுமற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே டாக்டர்கள் குழு ஒன்று கருணாநிதியின் உடல்நிலையைப் பரிசோதித்து வருகிறது.
திமுக தொண்டர்களின் கோஷம், போலீஸார் தடியடி மற்றும் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் என்று சென்னை மத்திய சிறை பகுதிபோர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!