For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகளை சந்தித்த இலங்கை அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில், விடுதலைப் புலிகளின் கோட்டையான வன்னி பகுதிக்குள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நுழைந்தஇலங்கை அமைச்சர் ஒருவர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் திரும்பியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில்இலங்கை அமைச்சர் ஒருவர் புலிகளின் கோட்டைக்குள் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை.

பல ஆண்டுகளாக, விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில்தான் வன்னி பகுதி இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ளஒரு சர்ச்சிற்கு வருகை தந்த இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கானஅமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுலே, சில விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சந்தித்தார்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரமநலன்குளம் பகுதியிலிருந்து, 9 கி.மீ. தூரம் சென்றால்தான் இந்த சர்ச் வரும்.

புலிகளும் அவருக்குச் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். தக்க பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்று,பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளனர் விடுதலைப்புலிகள்.

அமைச்சரை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவினர் 6 பேர் பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச்சென்றனர். முன்னதாக வவுனியாவிலேயே அமைச்சரின் துப்பாக்கிகளை வாங்கிக் கொண்ட புலிகள் அவற்றை,அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த ராணுவத்தினரிடமே கொடுத்துவிட்டு, அவரை மட்டும் தங்கள் "கோட்டை"க்குள்விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையின்போது, "எங்களுக்குத் தனி நாடு கூட வேண்டாம். தமிழர்கள் அமைதியாகவும்மானத்துடனும் வாழ்வதற்கு வழி செய்தாலே போதும். இதுபோன்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடரவேண்டும்" என்று அமைச்சரிடம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கடந்த 11 ஆண்டுகளில், இலங்கை அமைச்சர் ஒருவர் விடுதலைப்புலிகளின் கோட்டைக்குள் நுழைந்திருப்பதுஇதுதான் முதல் முறை. கடந்த 1990ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி, விடுதலைப்புலிகளின் கோட்டையானயாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தார் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது.

ஆனால், அதற்கு மறுநாளே, இலங்கை ராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் பெரும் போர் வெடித்தது.

விடுதலைப்புலிகளைச் சந்தித்துவிட்டு வந்த அமைச்சர் ஜெயராஜ் கூறுகையில், விரைவில் மற்றொரு கேபினட்அமைச்சருடன் புலிகளை மீண்டும் சந்திப்பேன் என்றார்.

புலிகளுக்குள் பிளவா?

இந் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசுக்குசொந்தமான பத்திரிக்கை கூறுகிறது.

1990ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பாதுகாப்பு அதிகரியாகஇருந்தவரும், புலிகளின் வன்னி பகுதி உளவுப் படையின் தலைவராகவும் இருக்கும் ஜெயம் சமீபத்தில் கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்தார்.

ராணுவம் வைத்த கண்ணி வெடியில் தான் இவர் காயமடைந்தார் என்று புலிகள் குற்றம் சாட்டினர். ஆனால், அந்தப்பகுதியில் ராணுவ செயல்பாடே இல்லை, கண்ணி வெடியை நாங்கள் வைக்கவே இல்லை என்று ராணுவம்மறுத்துள்ளது.

புலிகளின் ஒரு பிரிவினர் தான் இந்த கண்ணிவெடியை வைத்து ஜெயத்தை தாக்கினர் என்று ராணுவம் கூறுகிறது.

நார்வே பேச்சுவார்த்தைக் குழுவினர் இலங்கைக்கு வந்ததிலிருந்தே புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு விட்டதாகக்கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் குரல் எழுப்பிய போதிலும், போர் தொடர வேண்டும்என்று மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.

நார்வே தூதுக்குழுவைச் சந்திக்கச் சென்று கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனும் கண்ணி வெடியில் சிக்கினார். அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால், அவரது பாதுகாவலர்இறந்தார்.

கடற்புலிகளின் இரண்டாவது மட்ட தலைவராக இருந்த கங்கை அமரன் என்பவர், தன்னுடையமனைவி-குழந்தையுடன் புலிகளின் ஒரு பிரிவினராலேயே கொல்லப்பட்டதாகவும் அரசுக்கு சொந்தமானபத்திரிக்கை கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X