அறக்கட்டளையைக் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ்
சென்னை:
த.மா.கா. தலைவர் மூப்பனார் மறைவையடுத்து, தமிழ் நாடு காங்கிரஸ் அறக்கட்டளையைக் கைப்பற்ற காங்கிரஸ்தீவிர முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அப்போது இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக மூப்பனார், முன்னாள் மகாராஷ்ட்ரா கவர்னர் சி.சுப்ரமணியம், பா. ராமச்சந்திர ஆதித்தன், ராமசாமி உடையார் மற்றும் வரதராஜூலு ஆகியோரை காமராஜர்நியமித்தார்.
இந்த 5 பேர்களில் இப்போது, ராமசாமி உடையாடர மற்றும் வரதராஜூலு ஆகியோர் மட்டுமே உயிருடன்இருக்கிறார்கள். தற்போது இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு காங்கிரசிலிருந்து மூப்பனார் பிரிந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவுடன்,இந்த அறக்கட்டளையை த.மா.கா. கைப்பற்றியது.
இப்போது காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, இந்த அறக்கட்டளைக்கு அறங்காவலர்களாக மேலும் 5பேரை நியமித்து இருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் யசோதா, முன்னாள் மத்திய அமைச்சர்அருணாச்சலம், எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் ஆகிய 4 பேர் காங்கிரஸ் காரர்கள். மேலும், தமாகா சார்பாக ஜெயந்திநடராஜனும் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் மற்றும் சத்தியமூர்த்தி பவன் ஆகியவையும் மற்றும்ஏராளமான வாகனங்களும் இந்த அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தற்போது மூப்பனார் மறைந்திருக்கும் நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் அறக்கட்டளையை மீண்டும் காங்கிரஸ்கைப்பற்ற முயன்று வருவதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!