For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடையப் போகிறது தமாகா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விரைவில் பல துண்டுகளாக உடையும் என்று அக்கட்சி வட்டாரத்திலேயேபேசப்படுகிறது.

பண்பு நிறைந்த தலைவர், மக்கள் தலைவர் என்று போற்றப்பட்ட ஜி.கே. மூப்பனார் சமீபத்தில் காலமானார். அவரதுமறைவு தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது.

மேலும், அவர் துவக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது."மூப்பனார்தான் எல்லாம், அவர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது" என்று பழகி விட்ட தமாகாவினருக்குஇப்போது "கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல" உள்ளது.

மேலும், மூப்பனார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கட்சியிலுள்ள அனைத்துஅமைப்புகளையும் கலைத்து விட்டார். இதனால் இப்போது கட்சியை நடத்திச் செல்ல எந்த முறையானஅமைப்புகளும் இல்லை. இதனால் மிகவும் குழம்பிப் போயுள்ளனர் தமாகாவினர்.

இந்த நிலையில் மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும்இவரது தேர்வுக்கு கட்சியின் பல இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்திரா காந்தி இறந்தபோது, ராஜீவ் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைப் பின்பற்றி மூப்பனார்இறந்தவுடன் அவரது மகனை தேர்வு செய்வதா என்றும் கட்சியில் வேறு தலைவர்களே இல்லையா என்றும்அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் "மதில் மேல் பூனைகளாக" பல தலைவர்கள் தமாகா கட்சிக்குள் உலவி வருகின்றனர்.கோவிந்தவாசனின் நடவடிக்கை, அவரது அணுகுமுறை ஆகியவற்றைப் பார்த்து விரைவில் அவர்கள் வேறுகட்சிகளில் குதிக்கக் காத்துள்ளனர்.

அந்தத் தலைவர்கள் யார் என்ற விவரம் இதோ ...

1.
ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், தனுஷ்கோடி ஆதித்தன் என சில புள்ளிகள் காங்கிரஸ் கட்சியில் சேர தூது விட்டுள்ளனராம். தற்போது சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட பல காங்கிரஸ் சொத்துக்களை சோனியா காந்தி மீட்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மேலும் சில தலைவர்கள் இந்தப் பட்டியலில் சேருவார்களாம். ஜெயந்திக்கு முக்கியப் பதவி கொடுக்க இளங்கோவன் சம்மதித்துள்ளாராம். மேலும் ஜெயலலிதாவுக்கு எதிராக சூடாகப் பேச காங்கிரஸ் கட்சிக்குள் யாரும் இல்லை என்ற குறையைத் தீர்க்க ஜெயந்தியைப் பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

2.
சென்னை மாநகராட்சி தமாகா தலைவர் வெற்றிவேல், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், விநிாயகமூர்த்தி, முக்தா சீனிவாசன் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகிய சில தலைவர்கள் "அம்மா"விடம் சரணடைய நாள் பார்த்து வருகிறார்களாம். விரைவில் இல்லாவிட்டாலும் கூட எப்படியும் சரண்டர் உறுதியாம்.

3.
சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் திமுகவில் சேரலாமா என்று யோசித்து வருகிறார்களாம். சூழ்நிலையைப் பொறுத்து அணி மாறத் திட்டமிட்டுள்ளனர். சட்டசபை தமாகா தலைவர் பதவியைப் பிடிக்க எஸ்.ஆர்.பியுடன் போட்டியிட்டவர் சோ.பா. ஆனால் மூப்பனாரின் உத்தரவின் பேரில் அப்பதவி எஸ்.ஆர்.பிக்குப் போனது.

4.
அப்போது முதலே சோ.பா. கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இப்போது எந்த அணிக்கும் போகாமல் பேசாமல் திமுகவில் ஐக்கியமாகி விடலாம் என்று அவர் கருதுகிறாராம். முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் ஆட்சேபிக்காவிட்டால் சோ.பா. விரைவில் கருப்பு-சிவப்பு வேட்டி கட்டுவாராம்.

5.
இவர்கள் தவிர அழகிரி எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் ப. சிதம்பரம் தலைமையிலான தமாகா ஜனநாயகப் பேரவைக்கு மாற காத்துள்ளனர். கொஞ்சம் பொறுத்திருக்குமாறு அவர்களை சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார். ப.சிதம்பரம் தனது மனதில் மெகா திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக கூறிக் கொள்கிறார்கள்.

இப்படி தமாகா தலைவர்கள் அத்தனை பேரும் எந்தக் கட்சியில் சேரலாம், எப்போது சேரலாம் என்ற யோசனையில்இருந்து வருகிறார்கள். ஆனால் கட்சியை எப்படி நடத்துவது, எப்படிக் கரையேற்றுவது என்ற கவலையில்கோவிந்தவாசன் உள்ளார். நிச்சயம் இது அவருக்கு மிகப் பெரிய சோதனைதான் என்கிறார்கள் அரசியல்வட்டாரத்தில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X