For Daily Alerts
விஷச் சாராய சாவுகள்: அரசு பதில் சொல்ல வேண்டும் - கருணாநிதி
சென்னை:
சென்னை-அம்பத்தூர் அருகே ஏற்பட்ட விஷச் சாராய சாவுகள் குறித்து, தமிழக அரசுதான் பதில் சொல்லவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சனிக்கிழமை கூறினார்.
"தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை முழுமையாக ஒழித்து விட்டோம்" என்று அண்மையில் தமிழக அமைச்சர் ஒருவர்கூறினார்.
ஆனால், இப்போது என்ன நடந்துள்ளது? இந்தக் கள்ளச் சாராயத்தால், அநியாயமாக 11 பேர் உயிர் போய்விட்டது.
இந்தச் சம்பவத்திற்கு தமிழக அரசு கட்டாயம் பதில் கூறியே ஆக வேண்டும்.
காவிரி பிரச்சனையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை திமுக ஆதரிக்கும் என்றார்கருணாநிதி.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!