For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்கள் நிலை என்ன? தவிப்பில் உறவினர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நியூயார்க், வாஷிங்டனில் நடந்த விமானத் தாக்குதல்களில் இறந்த, காயமடைந்தஇந்தியர்கள் நிலை தெரியாமல் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் உறைந்து போய்உள்ளனர்.

இந்தியாவின் சிலிகான் வேலியான பெங்களூரின் மிகப் பெரிய சாப்ட்வேர்நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில்அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.

அமெரிக்காவில் பணிபுரியும் தங்கள் குடும்பத்தினரின் நிலை என்ன ஆனது என்றுதெரியாமல் இந்தியாவில் வசிக்கும் அவர்களது உறவினர்கள் பதடத்திலும்,பயத்திலும்உளளனர்.

பலர் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு தாங்கள் பத்திரமாக இருப்பதாககூறிவருவதால் அவர்களது உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆண்டவனுக்குநன்றி கூறிவருகின்றனர்.

ஆனால், தங்களது உயிருக்குயிரான குழந்தைகள், நண்பர்களிடம் இருந்துதொலைபேசி அழைப்போ, ஈ-மெயிலோ வராதவர்களோ உச்ச கட்ட அச்சத்திலும்நிம்மதி இழந்த நிலையிலும் உள்ளனர்.

தங்கள் ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த சாப்ட் வேர் கம்பெனிகளும்தங்கள் அமெரிக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு அங்குள்ள ஊழியர்களின் நிலைகுறித்து அறிய முயற்சித்து வருகின்றன.

இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தி முதலில் அமெரிக்காவில்இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தற்போது பாங்காக்கில் இருக்கிறார்.

விப்ரோவின் உரிமையாளர் அஸிம் பிரேம்ஜி அமெரிக்காவில் தான் உள்ளார்.நியூயார்க் நகரில் இருந்த அவர் மன்ஹாட்டைன விட்டு வெளியேறிவிட்டார்.

நியூயார்க்கில் பணிபுரியும் விப்ரோவின் 50 பணியாளர்களில் 4 பேர் தாக்குதல் நடந்தஉலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் 4 பேரையும் காணவில்லை.இந்த தகவல் விப்ரோ ஊழியர்களுக்கு கவலை அளித்துள்ளது.

இவர்கள் 4 பேரையும் பற்றி தகவல் அறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக விப்ரோவின் வைஸ் பிரசிடென்ட் (டேலன்ட் என்கேஜ்மன்ட்) பிரதீக்குமார்கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பணிபுரியும் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிறு சிறுகுழுக்களாக பிரிந்து மருத்துவமனைகளுக்குச் சென்று காணாமல் போனவர்கள், அங்குஅனுமதிக்கப்ப்டடுள்ளனரா என தேடி வருகின்றனர் என்றார்.

கலிபோர்னியாவில் உள்ள விப்ரோ டெக்னாலஜீசின் வைஸ் பிரசிடென்ட் விவேக் பால்கூறுகையில், காணாமல் போனவர்கள் பற்றிய விவரம், அவர்களது புகைப்படம்அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் விப்ரோவின் 1,300 ஊழியர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஊழியர்களின் உறவினர்கள் 080 - 8440313 என்ற எண்ணை தொடர்பு கொண்டுஅவர்ளின் உறவினர்களைப்பற்றி தெரிந்து கொள்ளவும் விப்ரோ வசதி செய்துள்ளது.

இன்போசிஸ் டெக்னாலஜீஸ், டி.சி.எஸ் மற்றும் சத்யம் கம்யூட்டர் நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்.

இன்போசிஸ்சின் நிர்வாக இயக்குனர் நந்தன் நில்கேனி கூறுகையில், இன்போசிஸ்ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்.

எங்கள் ஊழியர்கள் பலர் ரத்ததானத்திலும் ஈடுபட்டுவருகிறார்கள். நியூயார்க்கில்இன்போசிஸ்சின் 200 பேர் பணிபுரிகின்றனர். அவர்களது உறவினர்கள் 080-8522378, 8522393 என்ற ஹாட்லைனில் எண்களில் தொடர்பு கொண்டு தங்கள்உறவினர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம் என்றார்.

சன் மைக்ரோ சிஸ்டம் ஊழியர்கள் பலரும் செவ்வாய்க்கிழமை முதல் தூக்கமில்லாமல்கவலையுடன் நாளை கழித்து வருகிறார்கள். இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் 300ஊழியர்கள் தாக்குதல் நடந்த உலக வர்த்தக மையத்தில்தான் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் நியூயார்க்கில் பணிபுரியும்அந்தநிறுவனத்தின் சக ஊழியர்கள் கவலையுடன் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது பத்திராக உள்ளதாக தெரிய வந்துள்ளது என்று சன்மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் உன்னிகிருஷ்ணன்தெரிவித்துளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X