உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? - காங்கிரஸ் இன்று முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி காங்கிரஸ் கட்சி மேலிடம் இன்று முடிவுசெய்யும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன் கூறினார்.

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா அல்லது கூட்டணி வைத்தால்யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்துப் பேச கட்சித் தலைவி சோனியா காந்தியை இளங்கோவன்சந்தித்துள்ளார்.

அப்போது அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அக்கட்சி காங்கிரசுக்கு குறைந்த அளவு இடங்களைத்தான்ஒதுக்கும்.

அதுவும் காங்கிரஸ் வெற்றிபெற முடியாத தொகுதிகளைத்தான் அக்கட்சி நமக்கு ஒதுக்கும். தனி அணியைஉருவாக்கிப் போட்டியிட்டால் அதிக பலத்துடன் வெற்றிபெறலாம் என்று இளங்கோவன் எடுத்துக் கூறியதாகக்கூறப்படுகிறது.

சோனியா காந்தியைச் சந்தித்துவிட்டு டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது இளங்கோவன்கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை சோனியாவிடம் தெரிவித்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில்கூட்டணி குறித்து சிறிய கட்சிகள் வரை அதிமுக ஆலோசனை நடத்தியுள்ளது. ஆனால் காங்கிரசை மட்டும் இன்னும்பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதை நாங்களும் அவமானமாகக் கருதவில்லை.

பதிய அணி அமைப்பதாக இருந்தால் ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைநடத்தப்படும். எனினும் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை நாங்கள் அனைவரம் ஏற்றுக்கொள்வோம்.

மேலும் என்னை மாற்றவேண்டும் என்று ஒரு சிறியகூட்டம் நாள்தோறும் டெல்லியில் தலைமையிடம் வலியுறுத்திவருகிறது. இந்த 5-6 பேரால் ஒன்றும் பிரச்சனை ஏற்படாது.

அனுமன் இல்லை என்றால் ராமாயணம் இல்லை. அதேபோல கோஷ்டி இல்லை என்றால் காங்கிரஸ் இல்லைஎன்றாகிவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் அது கொஞ்சம் ஓவர்தான்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற