கவனக் குறைவால் சிறுவன் சாவு - பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்ததை அச்சிறுவன் இருந்த உடல்ஊனமுற்றோருக்கான பள்ளி அலுவலர்கள் கவனிக்கத் தவறியதால், அவனுடைய பெற்றோருக்கு அந்தப் பள்ளிரூ.1 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி, சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்ற அந்தப் பையனைக் காணவில்லை என்றுஅவனுடைய தந்தை, அவன் படித்த கானார்பட்டியில் உள்ள லில்லியன் உடல் ஊனமுற்றோருக்கான பள்ளியில்தெரிவித்தார்.

இதையடுத்து, அந்தப் பள்ளியின் தாளாளர் போலீசில் இதுகுறித்துப் புகார் செய்தார். போலீசார் தேடியதில்,அருகிலுள்ள ஒரு குளத்திலிருந்து அந்தப் பையனின் உடல் மீட்கப்பட்டது.

பள்ளி அலுவலர்களின் கவனக் குறைவால்தான், தன் பையன் இறந்துவிட்டான் என்று கூறி, அவனுடைய தந்தைநுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம், அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு லில்லியன்பள்ளி ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, அந்தச் சிறுவனின் தந்தை ஒரு நுகர்வோர் கிடையாது என்றும் அதனால் அந்தப் புகாரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் பள்ளி நிர்வாகிகள் கூறி வந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற