For Daily Alerts
பழனி மலையில் விரைவில் கேபிள் கார்
பழனி:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் மலைப் பாதையில் கயிற்றுப் பாதை ரயில் (கேபிள் கார்)அமைக்க வெளிநாட்டு உதவி கோரப்பட்டுள்ளதாக மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமிகூறியுள்ளார்.
தற்போது உள்ள மின்சார இழுவை ரயிலை விட அதிக வேகத்துடனும், அதிக நபர்களை ஏற்றிக்கொண்டு இந்தகயிற்றுப் பாதை ரயில் செல்லும். ரூ.4 கோடி மதிப்பில் இது அமைக்கப்படுகிறது.
இதற்காக வெளிநாடுகளிலும் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியநாடுகளிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன என்றார் ராமசாமி.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!