உள்ளாட்சி தேர்தல் கூட்டணி: காங்கிரஸ் இன்று இறுதி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து இன்று (புதன்கிழமை) மாலை முடிவுஅறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சிஅறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்ய 11 பேர்கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது.

தமிழகத்தில் எந்த மாதிரி கூட்டணி அமைத்தால் காங்கிரசிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதுகுறித்து விவாதிக்க ரமேஷ் சென்னிதாலாவை கட்சி தலைமை சென்னைக்கு அனுப்பி வைத்தது. இவர் சோனியாகாந்தி அமைத்த குழுவினரிடம் பேசி அவர்கள் கருத்தை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் தேர்தல் பணிக்குழுவினருடன் 6 மணி நேரம் பேசி அவர்கள் கருத்தை கேட்டறிந்தேன். அவர்கள் கருத்தைநான் கட்சி தலைவர் சோனியா காந்தியிடமும், பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்திடமும் தெரிவிப்பேன்.

கூட்டணி குறித்த முடிவை அவர்கள் இன்று (புதன்கிழமை) மாலை அறிவிப்பார்கள். மேலும் உள்ளாட்சி தேர்தலில்காஙகிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிடும் என்றார் அவர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கரஐயர் டெல்லி விரைந்துள்ளார். அவர்சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வரவிக்கும் உள்ளாட்சி தேர்தலில்அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும். இந்தக் கருத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்சோனியா காந்தியிடம் வற்புறுத்தவுள்ளேன்" என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற