கட்சி உத்தரவிட்டால் மீண்டும் போட்டி... ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் நான்தான் போட்டியிட வேண்டும் என்றுகட்சி உத்தரவிட்டால் அதை நான்மறுக்க மாட்டேன் என்று சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் கடைசிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.அதன் பிறகு செய்தியாளர்களிடம்ஸ்டாலின் பேசுகையில், எனது ஐந்து ஆண்டு கால பணியை மன நிறைவுடன் செய்த திருப்தி எனக்கு உள்ளது.என்னால் முடிந்த அளவுக்கு மக்கள் பணிகளை சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

மாநகராட்சி கமிஷனர் கடந்த சில மாதங்களாக எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் பல பணிகளைஎன்னால் முழுமை செய்ய முடியவில்லை. இதை மக்கள் அறிவார்கள்.

மீண்டும் மேயர் தேர்தலில் போட்டியிட நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் என்னைத் தொடர்ந்துதொடர்புகொள்ளும் தொண்டர்கள் நான் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால்இளைஞர் அணியின் செயலாளர் என்ற வகையில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி பணியில் ஈடுபட எனக்குநேரம் போதாத நிலை உள்ளது.

இருப்பினும் கட்சி தலைமை உத்தரவிட்டால், நான்தான் போட்டியிட வேண்டும் என்று கட்டளையிட்டால் அதைமறுக்க மாட்டேன். கட்டாயம் போட்டியிடுவேன் என்றார் ஸ்டாலின்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற