ஆவணங்களைப் பெற்றார் வெங்கடபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்குத் தொடர்பான 10,000 பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களைசென்னை உயர்நீதிமன்றம், டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பு வக்கீலாகஆஜராகும் வெங்கடபதியிடம் வழங்கியது.

டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கு ஆகியவை தொடர்பானஅனைத்து ஆவணங்களையும் தன்னிடம் தராமல் இவற்றின் மீதான அப்பீல் மனுக்களைவிசாரிக்கக் கூடாது என்று வெங்கடபதி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்திருந்தார்.

ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து சுப்-ரீம் கோர்ட்டில்மனு செய்து வழக்கு விசாரணைக்கு ஸ்டே வாங்கினார்.

அதன் பின்னர் சுப்ம் கோர்ட், வெங்கடபதிக்கு வழக்குகள் சம்பந்தமான அனைத்துஆவணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து இரவு பகலாக ஆவணங்களை -நகல் எடுக்கும் பணி -நடந்தது.இந்தப்பணி செவ்வாய்க்கிழமை பிற்பகல் -முடிந்தது. அதன் பிறகு வெங்கடபதியிடம்ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டன.

10,000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது இந்த ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற