சின்னம் கேட்டு சந்திரலேகா வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் ஜனதாக் கட்சியின் சின்னமான ஏர் உழவன் சின்னத்தைக் கொடுக்க வேண்டும் என்றுஅக்கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரலேகா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இதுதொடர்பாக சந்திரலோக தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த சட்டசபைத் தேர்தலில் எங்களது கட்திக்கு ஏர்உழவன் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஏர் உழவன் சின்னத்தைத் தர முடியாது என்றுதேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதை ரத்து செய்து எங்களது சின்னமான ஏர் உழவன் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்றுகூறியுள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், 2 வாரத்திற்குள் பதில் தருமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற